தவெக தலைவர் விஜய் வருகையால் வாக்கு சதவீதம் உயர்வா? உண்மையை போட்டுடைத்த ஆர்.எஸ். பாரதி!

Published : Apr 23, 2026, 11:06 PM IST
rs bharathi

சுருக்கம்

2024 நாடாளுமன்ற தேர்தல் மனநிலையே தொடர்வதால் திமுக 200க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஸ்டாலின் மீண்டும் முதல்வராவது உறுதி என்றும் திமுக அமைச்சர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு காலை 7 முதல் விறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் முன் எப்போது இல்லாத வகையில் வரலாற்றில் முதல் முறையாக 84.29 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மொத்தம் 4.82 கோடி வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 91.78% வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக குமரியில் 75.46% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வாக்கு சதவீதம் தொடர்பாக ஆளுங்கட்சிக்கு எதிராக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக திமுக அமைச்சர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: கடந்த 1967, 1971, 1989, 1996, 2006, 2021 இந்த 6 சட்டப்பேரவை தேர்தலில் என்ன மாதிரியான மனநிலை இருந்ததோ, அதே மனநிலை தான் இன்றும் உள்ளது. அதுமட்டும் இல்லை 2024 நாடாளுமன்ற தேர்தலில், எவ்வளவு ஓட்டுகள் பதிவாகியதோ அதே எண்ணிக்கையிலான ஓட்டுக்கள் தான் பதிவாகி இருக்கிறது. அந்த தேர்தலில் நாங்கள் 40/40 வெற்றி பெற்றோம். இப்போது 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

வாக்கு சதவீதம் உயர்ந்து உள்ளது என்று சொல்வது தவறு. போன முறை எவ்வளவு வாக்குகள் பதிவாகியது என்று பாருங்கள். காரணம், சதவீதம் என்று பார்த்தீங்க என்றால் 65 லட்சம் ஓட்டுகளை நீக்கிவிட்டனர். அப்படி பார்க்கும் போது வாக்கு சதவீதம் கூடினது போன்று தெரியும். போன முறை எவ்வளவு வாக்குகள் பதிவாகியது. 4 கோடியே 71 லட்சம் வாக்குகள் பதிவாகியது. அதே நம்பர் தான் இப்போதும் பதிவாகி இருக்கிறது.

0.6 சதவீதம் மட்டுமே இப்போது வந்த கணக்கின்படி அதிகரித்து இருக்கிறது. 0.6 என்பது ரொம்ப ரொம்ப குறைவானது. அதில் தான் புது ஓட்டுகளும் அடங்குகிறது. போன முறை டபுள் டபுள் ஓட்டுக்கள் போடப்பட்டு இருக்கும். அது எல்லாம் இப்போது நீக்கப்பட்டு ஒரே ஓட்டாக மாறியிருக்கும். அதையெல்லாம் சேர்த்து பார்க்கின்ற போது இதில் டேலி ஆகிடும். ஆக மொத்தம் எந்த வாக்கு சதவீதமும் கூடவில்லை. 2024 தேர்தலில் தமிழக மக்களின் மனநிலை எப்படி இருந்ததோ அதே போன்று தான் இப்போதும் இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கப்போவது உறுதி. திமுக மீண்டும் வெற்றி பெறப்போவதும் உறுதி என தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Advocate General Vijay Narayan: தமிழகத்தின் புதிய அரசு தலைமை வழக்கறிஞர் நியமனம்! யார் இந்த விஜய் நாராயண்? விஜய்யின் வழக்கிலும் வாதாடியவர்!
எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு சி.வி. சண்முகம் கடும் எதிர்ப்பு...! | CV Shanmugam vs EPS