வாக்குப்பதிவில் வரலாறு படைத்த தமிழகம்.. 4.82 கோடி வாக்காளர்கள் தந்த ‘ட்விஸ்ட்’.. எந்த மாவட்டம் டாப்? எது லோயஸ்ட்?

Published : Apr 23, 2026, 08:07 PM IST
Tamil Nadu Assembly Election 2026

சுருக்கம்

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 84.29% வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவில் எந்த மாவட்டம் டாப்? எந்த மாவட்டம் கடைசியில் உள்ளது? என்பது குறித்து பார்ப்போம்.

தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று (ஏப்ரல் 23) வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை உள்ள வாக்குச்சாவடிகளில் மக்கள் அலை அலையாக குவிந்து தங்கள் வாக்குகளை செலுத்தினார்கள். மேலும் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என கட்சிகளின் வேட்பாளர்கள், திரையுலக பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

தமிழகம் வாக்குப்பதிவில் சாதனை

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றியதால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்து கொண்டே சென்றது. மாலை 5 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 82.24% வாக்குகள் பதிவாகி இருந்தன. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 6 மணி நிலவரப்படி தமிழகத்தில் 84.29% வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இவ்வளவு சதவீதம் வாக்குகள் பதிவாவது இதுவே முதன் முறையாகும். மொத்தம் 4.82 கோடி வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

எந்த மாவட்டத்தில் அதிகம்? எந்த மாவட்டத்தில் குறைவு?

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை விட 20 லட்சம் வாக்குகள் கூடுதலாக பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 91.78% வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.46% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் நாமக்கல் 89.39%, நெல்லை 77.44%, தென்காசி 81.48%, தூத்துக்குஅடி 79.75%, ராமநாதபுரம் 76.18% என வாக்குகள் பதிவாகியுள்ளன. இது தவிர வேலூர் 87.63, திருப்பத்தூர் 87.57%, விழுப்புரம் 87.67%, கள்ளக்குறிச்சி 86.89%, சேலம் 90.19%, நாமக்கல் 89.46%, ஈரோடு 89.77%, திருப்பூர் 88.22%, நீலகிரி 78.43%, கோவை 84.40%, திண்டுக்கல் 88.29%, வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

சென்னை, மதுரையில் எவ்வளவு?

சென்னை மாவட்டத்தில் 83.03% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. திருச்சியில் 85.04%, மதுரை8யில் 80.20%, திருவாரூரில் 82.86% வாக்குகள் பதிவாகியுள்ளன. சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி என்று எண்ணப்பட உள்ளன. ஆகவே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? திமுகவா இல்லை அதிமுகவா? இல்லை தவெகவே என்பது அன்றைய தினம் தெரிந்து விடும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Advocate General Vijay Narayan: தமிழகத்தின் புதிய அரசு தலைமை வழக்கறிஞர் நியமனம்! யார் இந்த விஜய் நாராயண்? விஜய்யின் வழக்கிலும் வாதாடியவர்!
எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு சி.வி. சண்முகம் கடும் எதிர்ப்பு...! | CV Shanmugam vs EPS