திருமணம் முடிந்ததும் வாக்குச்சாவடிக்கு ஜூட் விட்ட தம்பதி... கல்யாண கோலத்தில் வாக்களித்தனர்

Published : Apr 23, 2026, 12:52 PM IST
TN Election

சுருக்கம்

காஞ்சிபுரத்தில் திருமணம் முடிந்த கையோடு, மணக்கோலத்திலேயே வாக்குச்சாவடிக்குச் சென்று புதுமணத் தம்பதி வாக்களித்தனர். ஜனநாயக கடமையை ஆற்றிய இந்த ஜோடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

காஞ்சிபுரத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்திருக்கு. திருமணம் முடிந்த கையோடு, ஒரு புது மாப்பிள்ளை தனது மனைவியுடன் மணக்கோலத்திலேயே வந்து ஓட்டு போட்டு, தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். காஞ்சிபுரம் அறம் வளர்த்தீஸ்வரர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ரவி ராகுல். இவர் ஒரு கன்ஸ்ட்ரக்‌ஷன் இன்ஜினியர், வீடு கட்டிக் கொடுக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும், விருத்தாசலத்தைச் சேர்ந்த சிவராஞ்சனிக்கும் இன்று காலை காஞ்சிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. சிவராஞ்சனியும் ஒரு சிவில் இன்ஜினியர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களித்த புதுமணத் தம்பதி

திருமணம் முடிந்த உடனேயே, இந்த புதுமணத் தம்பதி அருகில் இருந்த ஒரு தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்குச் சென்றனர். மணக்கோலத்திலேயே வந்து ரவி ராகுல் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி, தனது வாக்கை பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவியும் வாக்களித்தார். இதுகுறித்து பேசிய ரவி ராகுல், "வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை. அதை அனைவரும் நிறைவேற்ற வேண்டும்," என்று கூறினார். மேலும், தனது திருமண நாளிலேயே வாக்களித்தது இந்த நாளை இன்னும் மறக்க முடியாததாக மாற்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இன்று (ஏப்ரல் 23, 2026) தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால், இது ஒரு முக்கியமான நிகழ்வு என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர் அஜித், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அமைச்சர் கே.என். நேரு, திரைப்பிரபலங்கள் ரஜினிகாந்த், துருவ் விக்ரம் உள்ளிட்ட பலரும் இன்று காலை தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குச்சாவடியில் இருந்த தேர்தல் அதிகாரிகளும், சக வாக்காளர்களும், தங்களின் இந்த சிறப்பு நாளில் ஜனநாயக கடமையை முதன்மையாகக் கருதி செயல்பட்ட புதுமணத் தம்பதியை வெகுவாகப் பாராட்டினர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் மேற்கு வங்கத்தில் 2026ம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது; அங்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 அன்று நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்தத் தேர்தலில், காங்கிரஸ், விசிக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் திமுக தலைமையிலான கூட்டணியும், பாஜக, அமமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகளுடன் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பிரதானமாக மோதுகின்றன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வாக்குச்சாவடிக்கு படையெடுத்த இளைஞர்கள்.! இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழகம்.! வாக்குப்பதிவு 95 சதவீதம் இருக்குமாம்.!
ஒரு விரல் புரட்சி... தமிழ்நாட்டில் ரெக்கார்டு பிரேக்கிங் வாக்குப்பதிவு... 11 மணி நிலவரம் என்ன தெரியுமா?