ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000.. 3 சிலிண்டர் இலவசம்.. கல்விக்கடன் தள்ளுபடி.. பாஜக தேர்தல் அறிக்கை!

Published : Apr 21, 2026, 06:13 PM IST
bjp manifesto

சுருக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக தனது 'புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026' தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள், கல்விக்கடன் போன்ற முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. 

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணயில் உள்ள பாஜகவின் தேர்தல் அறிக்கை சென்னையில் வெளியிடப்பட்டது. புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026 எனும் பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சரும், முன்னாள் பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா வெளியிட்டார். அதில், குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2000, மூன்று இலவச சிலிண்டர்கள், எலக்ட்ரிக் வாகனம் வாங்க ரூ.25,000 மானியம் உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன.

மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான வாக்குறுதி

* குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும்.

* குடும்ப அட்டைக்கு ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். அவை பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளி பண்டிகைகள் நாட்களில் வழங்கப்படும்.

* பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம். இதற்காகத் தடையற்ற 'ஜீரோ-எப்ஐஆர்' (Zero-FIR) பதிவு முறை, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளருக்கான பாதுகாப்பு, பாலியல், போக்சோ குற்றங்கள் உள்ளிட்ட கொடூரமான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

* என்டிஏ ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10,000 ரூபாய் வழங்கப்படும்.

* தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை ஒழிக்க தனித் துறை உருவாக்கப்படும்.

* முருகப் பெருமானின் பெருமையைப் போற்றும் வகையில், தைப்பூசத் திருநாளை மாநில விழாவாக அறிவிப்போம்

* பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSME), உற்பத்தி அலகுகளை அமைக்க ரூ.50 லட்சம் வரை வட்டி இல்லாக் கடன்கள் வழங்கப்படும்.

* முதன்முறை தொழில் தொடங்கும் 2,000 இளைஞர்களுக்கு 5 ஆண்டு காலத்திற்கு ரூ.15 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

12.மின்சார இருசக்கர வாகனங்கள் (e-scooters) வாங்குவதற்குத் தகுதியுள்ள பெண்களுக்கு ரூ.25,000 மானியம் வழங்கப்படும்.

* ஒரு லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* கல்விக்கடன் கட்ட முடியாமல் தவிக்கும் வேலையற்ற இளைஞர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும்.

* 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் வகையில், ஒவ்வொரு வட்டார வள மையத்திலும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபாட்டிக்ஸ் பயிற்சி அளிக்கப்படும்.

விவசாயிகள் மற்றும் மீனவர் நலன்

* மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரண உதவித் தொகை ரூபாய் 8,000த்தில் இருந்து 12,000 ஆக வழங்கப்படும்.

* PM-KISAN திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.3,000 மாநில அரசு சார்பில் வழங்கப்படும்.

* தேனீ வளர்ப்பு கோழி வளர்ப்பதற்காக சிறுகுறு விவசாயிகளுக்கு ரூபாய் 50,000 மானியம் ஒருமுறை வழங்கப்படும்.

* ஒவ்வொரு மாவட்ட அரசு மருத்துவமனையையும் மேம்படுத்தும் வகையில், கூடுதல் 3 ஆம்புலன்ஸ்கள்

* கால்நடை வளர்ப்பிற்கு ரூ.50,000 நிதியுதவி அளிக்கப்படும்.

மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டமான 'பாரத் உத்யோகிக் விகாஸ் யோஜனா' (BHAVYA) திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 10 'பிளக்-அண்ட்-பிளே' (Plug-and-Play) தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம். தொழில் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் தயார் நிலையில் உள்ள இந்தத் தொழிற் பூங்காக்கள் மூலம், தமிழகத் தொழிலதிபர்கள் அத்திட்டத்தின் முழுப் பலன்களையும் பெறுவதை நமது அரசு உறுதி செய்யும்.

* சென்னை-பெங்களூரு-ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும்.

* கோவை-திருப்பூர்-சேலம் இடையே பிரத்யேக RRTS வழித்தடம் அமைக்கப்படும்.

* சென்னை முதல் டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவிற்கு புதிய 'ஸ்லீப்பர் வந்தே பாரத்' ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TVK Vijay Speech | மோடி, அமிதஷா காலில் விழுவார் ஸ்டாலின்.....வெளுத்து வாங்கிய தளபதி !
பாஜக காலில் திமுக விழும்.. 10 முறை தோல்வி அடைந்த சேலத்துக்காரர் இபிஎஸ்க்கு சவால் விட்ட விஜய்!