
கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவத்தை விவரிக்க முடியாத துயரமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இரவு 7.45 மணிக்கே தகவல் கிடைத்தது, கரூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்பு கொண்ட நிலையை அறிந்ததாக அவர் கூறினார். இது அரசியல் கூட்டங்களில் நடக்காத சம்பவம், நடந்திருக்கக் கூடாதது என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
நீதித்துறை விசாரணையின் உண்மையான காரணம் வெளிப்பட வேண்டும் என்றும், அதனை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்தார். நடிகர் விஜய்யை கைது செய்வீர்களா என்ற கேள்விக்கு, “யாரை கைது செய்வது, யாரை செய்ய முடியாது என்பதை இப்போது கூற முடியாது” என்றும் அவர் கூறினார் தெளிவுபடுத்தினார். காவல்துறையின் குறைபாடு குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டார்.
விபத்து நடந்த மறுநாள் அதிகாலையில் முதல்வர் ஸ்டாலின் கரூர் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் சவக்கிடங்கிற்குச் சென்று உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினார். மருத்துவமனையிலேயே அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டமும் நடத்தினார்.
இந்த துயர சம்பவத்தில் மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு உறுதிப்படுத்தியுள்ளது. அதில் 17 பேர் பெண்கள். மேலும் 4 சிறுவர்கள் மற்றும் 5 சிறுமிகள் பலியானது மனதை உலுக்கியது. உயிரிழந்த 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 28 பேர். ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த தலா 2 பேர், சேலத்தைச் சேர்ந்த ஒருவர் என பலர் பலியாகியுள்ளனர். மாவட்ட வாரியாக உயிரிழப்பு விவரங்கள் வெளியிடப்பட்டதால், குடும்பங்கள் துயரத்தில் மூழ்கியுள்ளன.
இதற்கிடையில், தவெக சார்பில் நடந்த பேரணியில் ஏற்பட்ட நெரிசலுக்குப் பின், விஜய் உடனடியாக எதுவும் பேசாமல் கேரவனுக்குள் சென்றதும், பின்னர், திருச்சி வழியாக சென்னைக்கு திரும்பியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, விஜய்யின் சென்னை இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.