தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை?

By Velmurugan sFirst Published Jan 12, 2023, 1:59 PM IST
Highlights

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை பள்ளிகளுக்கு விடப்படுவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகத்தின் ஏதேனும் ஒரு பகுதியில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமும் சிறப்பாக கொண்டாடும் ஒரு பண்டிகையாக உள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வருகின்ற ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்பட உள்ளது.

சேலத்தில் கார்கள் மோதி பயங்கர தீ விபத்து; 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

அதன்படி சனிக்கிழமை போகி பண்டிகை, ஞாயிற்றுக் கிழமை பொங்கல் பண்டிகை, திங்கள் கிழமை மாட்டு பொங்கல், செவ்வாய் கிழமை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இவை அனைத்தும் தமிழக அரசின் விடுமுறை தினங்களாகும்.

இந்நிலையில், போகி பண்டிகைக்கு முதல் நாளான வெள்ளிக் கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவ்வாறு ஒரு நாள் முன்னதாக விடுமுறை அளிக்கப்படும் பட்சத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல நினைப்பவர்களுக்கு, இது வசதியாக அமையும்.

700 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவிலில் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய காவல்துறையினர்

தற்போது வரை விடுமுறை குறித்த எந்தவொரு அறிவிப்பும் அரசு சார்பில் முறையாக வெளியாகவில்லை. ஆனால், அதற்கான ஆலோசனை மட்டும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

click me!