பழனி கோயில் குடமுழுக்கில் தமிழில் மந்திரங்கள் ஓதப்படும்- அமைச்சர் சேகர்பாபு உறுதி

By Ajmal Khan  |  First Published Jan 12, 2023, 1:07 PM IST

அனைத்து திருக்கோயில்களிலும், தேவாரம் மற்றும் திருவாசகம் ஒலிக்கிறது என்றால் அதற்கு முழு காரணமும் திமுக அரசு தான் காரணம் தெரிவித்த அறிநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அமர்ந்த இடத்தில் இருந்தே தமிழை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.


பழனி குடமுழுக்கு- தமிழில் மந்திரங்கள்

தமிழ் மந்திரங்கள் தமிழக சட்டப் பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தின் போது, திருவிடைமருதூர் கோவி செழியன் கோயில் குடமுழுக்கு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்றைக்கு குடமுழுக்கு தொடர்பான பத்திரிகைகள் அனைத்தும் முழுக்க முழுக்க தமிழிலேயே அச்சடிக்கப்படுகிறது என்றால் அதற்கு முழு காரணமும் திமுக ஆட்சி தான் என குறிப்பிட்டார். பழனி முருகன் கோயிலில் நூற்றுக்கும் அதிகமான ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு வேத மந்திரங்கள் தமிழில் வாசிக்கப்படுகிறது என்றால் அதற்கும் திமுக அரசு தான் காரணம் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ள பழனி குடமுழுக்கு விழாவில் தமிழ் மந்திரமும்,ஆகம விதிப்படி வேதங்களும் ஓதப்படும் என தெரிவித்தார்.  

Tap to resize

Latest Videos

இபிஎஸ் மாவட்டத்தில் அம்மா உணவகத்தை மூட திட்டம்..! திமுக அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஓபிஎஸ்..!

தமிழை வளர்க்கும் முதல்வர்

அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்க வாசகர் உள்ளிட்ட அனைவரும், நடந்தே சென்று தமிழை வளர்த்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்த இடத்தில் இருந்தே தமிழை வளர்த்து வருவதாகவும் அமைச்சர் கூறினார். தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும், தேவாரம் மற்றும் திருவாசகம் ஒலிக்கிறது என்றால் அதற்கு முழு காரணமும் திமுக அரசு தான் எனவும் அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்..

இதையும் படியுங்கள்

ராமர் கால் தடத்திற்கு பாதிப்பில்லாத வகையில் சேது சமுத்திரத் திட்டம்.! முதலமைச்சரின் தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு

click me!