குடித்து விட்டு மனைவியிடம் விடிய விடிய தகராறு...! உலக்கையால் கணவனை அடித்துக் கொன்ற கொடூரம்...!

Asianet News Tamil  
Published : Apr 23, 2018, 03:48 PM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
குடித்து விட்டு மனைவியிடம் விடிய விடிய தகராறு...! உலக்கையால் கணவனை அடித்துக் கொன்ற கொடூரம்...!

சுருக்கம்

Wife murdered her husband in Nellai

குடித்து விட்டு நாள்தோறும் மனைவியை அடித்து உதைத்து கொடுமை செய்து வந்த கணவனை, மனைவியே உலக்கையால் அடித்து கொலை செய்த சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே தெற்குபூலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி லட்சுமி, லட்சுமணன் நாள்தோளும் குடித்துவிட்டு வந்து, தகராறி செய்து வருவராம்.

கடந்த சனிக்கிழமை அன்றும், லட்சுமணன் குடித்துவிட்டு விட்டு வந்து மனைவி லட்சுமியிடம் விடிய விடிய தகராறு செய்துள்ளார். குடிபோதையில், லட்சுமியை, அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளார்.

லட்சுமியின் அலறரைக் கேட்ட பக்கத்து வீட்டார், லட்சுமணனை சமாதனப்படுத்தி உள்ளனர். அதன் பின்னரும், லட்சுமணன் வீட்டில் இருந்த விளக்குகளை எல்லாம் அடித்து உடைத்துள்ளார்.

இதன் பின்னர், அதிகாலை 3 மணிக்கு எழுந்த லட்சுமணன், மீண்டும் மனைவியை அடித்து உதைத்துள்ளார். பாறாங்கல்லைத் தூக்கி வந்து, லட்சுமி மீது போட்டு கொலை செய்ய முயன்றுள்ளார்.

அதை தட்டிவிட்ட லட்சுமி, அருகில் இருந்த உலக்கையை எடுத்து லட்சுமணனை அடித்துள்ளார். தலையில் அடி விழுந்ததால், லட்சுமணன் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து, அருகில் இருந்தோர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார், லட்சுமணன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லட்சுமியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும்.. வைரலாகும் செல்லூர் ராஜு பேட்டி.. கடுப்பான அதிமுக தொண்டர்கள்!
கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் - செல்லூர் ராஜு பேட்டி