சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி... பட்டபகலில் நடந்த பரபரப்பு! சினிமாவை மிஞ்சிய த்ரில் சம்பவம்!

Asianet News Tamil  
Published : Apr 23, 2018, 02:33 PM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
 சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி... பட்டபகலில் நடந்த பரபரப்பு! சினிமாவை மிஞ்சிய த்ரில் சம்பவம்!

சுருக்கம்

bank robbery in chennai

இந்தியன் வங்கியில் மர்ம நபர் ரஒருவர் துப்பாக்கி முனையில் வாடிக்கையாளரிடம் இருந்து ரூ. 6 லட்சம் கொள்ளையடிக்க முயன்றவர்களை காவல்துறையினர் சினிமா பட பாணியில் மடக்கிப் பிடித்து அந்த நபரிடம் சாஸ்திரி நகர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று வாரத்தின் முதல் நாளான இன்று வங்கியில் கூட்டம் அதிகமாகவே காணப்படும், அதுபோல சென்னை அடையாறில் உள்ள இந்தியன் வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தவும் எடுக்கவும் வரிசையில் காத்திருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி அனைவரையும் மிரட்டியுள்ளார். வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை துப்பாக்கியை காட்டி மர்ம நபர் மிரட்டியுள்ளார்.

மேலும், ஒருவரிடம் இருந்து ரூ. 6 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு வெளியே ஓட முயன்றுள்ளார். இதனையடுத்து வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கியில் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் அவரை பிடிக்க முயன்றபோது துப்பாக்கியை காட்டி மிரட்டி வங்கியில் இருந்து வெளியே வந்திருகிறார் அந்த திருடன். இதனையடுத்து வங்கி அதிகாரிகள் சென்னை சாஸ்திரி நகர் போலீசில்  புகார் அளித்துள்ளனர். மேலும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல்அதிகாரியிடம் ரூ. 6 லட்சம் பணத்துடன் தப்பியோடிய நபர் சிக்கியுள்ளார்.

இதனையடுத்து அவரை மடக்கிப் பிடித்த போலீசார் பணத்தை பறிமுதல் செய்ததோடு அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட மர்ம நபரிடம் சாஸ்திரி நகர் போலீசார் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வைத்திருந்த துப்பாக்கி உண்மையான துப்பாக்கியா, இந்த கொள்ளையை நேக்காக ப்ளான் போட்ட அந்த மர்ம நபர் யார் என்பன உள்ளிட்ட விவரங்களை போலீசார் கேட்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும்.. வைரலாகும் செல்லூர் ராஜு பேட்டி.. கடுப்பான அதிமுக தொண்டர்கள்!
கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் - செல்லூர் ராஜு பேட்டி