கணவனை கொடூரமாக கொன்ற மனைவி கைது..!!

 
Published : Jun 26, 2017, 11:43 AM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
கணவனை கொடூரமாக கொன்ற மனைவி கைது..!!

சுருக்கம்

Wife killed her husband and she was arrested now

மது அருந்தி மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட கணவரை கொலை செய்த சம்பவம் சேலம், வாழப்பாடியில் நடந்துள்ளது. மேலும், கொலையில் ஈடுபட்ட மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மன்னாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு புவனேஸ்வரி என்ற மகளும், கணபதி, வசந்தாகுமார் என்ற மகன்களும் உள்ளனர்.

இதில் புவனேஸ்வரிக்கு திருமணமாகிவிட்டது. இரண்டு மகன்களும், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

முருகேசனுக்க மதுப்பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில், சம்பவம் நிகழ்ந்த அன்ற, முருகேசன், மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தனலட்சுமி, அவரது கை, கால்களை கட்டிப்போட்டு கழுத்தை துணியால் நெரித்து கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முத்தம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கோகுலவாசன், வாழப்பாடி காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். 

இந்த புகாரின் அடிப்படையில், வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் முருகேசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்ததாகக் கூறப்படும் முருகேசனின் மனைவி தனலட்சுமியை, வாழப்பாடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!