இன்னிக்கு மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டப்போகுது...... யாரும் வெளியே வந்துறாதீங்க...

Asianet News Tamil  
Published : Jun 26, 2017, 11:38 AM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
இன்னிக்கு மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டப்போகுது...... யாரும் வெளியே வந்துறாதீங்க...

சுருக்கம்

Chennai rains begin more showers today across Tamil Nadu

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 24 ஆம் தேதியோடு அக்னி நட்சத்திரம் முடிவுக்குப் பிறகு தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும் மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை வலுவடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யு என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக 7 செ.மீ. மழையும், குறைந்தபட்சமாக செஞ்சியில் 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, கடந்த 3 நாட்களாகவே பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் தமிழகத்தில் பலத்த காற்று வீசி வருவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

45+ வாக்கு வங்கி... புதிய கூட்டணியால் ஏறுமுகத்தில் அதிமுக..! 2021 தேர்தல் சொல்லும் அரசியல் கணக்கு..!
இனி மாதம் ரூ.3000 வழங்கப்படும்.. முதல்வர் ஸ்டாலினின் தடாலடி அறிவிப்பு!