மனைவி சம்மதத்தோடு கணவரை கொன்று கழிவறை தொட்டியில் வீசினேன் - கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்..

 
Published : May 16, 2017, 10:04 AM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
மனைவி சம்மதத்தோடு கணவரை கொன்று கழிவறை தொட்டியில் வீசினேன் - கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்..

சுருக்கம்

Wife killed her husband

கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக, மேற்கு வங்க தொழிலதிபரைக் கொன்றது எப்படி? என்று கைது செய்யப்பட்ட கள்ளக்காதலன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் விவேக் பிரசாத் புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் மனைவி ஜெயந்தி மற்றும் குழந்தைகளுடன் வசித்துவந்தார். விழுப்புரம் அருகே தொழிற்சாலையை புதுச்சேரியை சேர்ந்த பாபு என்ற ஷேக் முகமது என்பவர் கவனித்து வந்தார். இவருக்கும் ஜெயந்திக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இது விவேக்குக்கு தெரிய வந்ததும் கணவன் - மனைவிக்குள் பிரச்னை. பின்னர் பாபும் ஜெயந்தியும் சேர்ந்து விவேக்கை கொலை செய்துவிட்டு தெரியாதது போல நாடகமாடினர்.

இப்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பாபு போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது; விவேக் பிரசாத், புதுச்சேரி வந்தபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் தொடங்கும் தொழிற்சாலை பணிகளை என்னிடம் கொடுத்தார். சில மாதங்களுக்கு முன்பு எனக்கும் விவேக் பிரசாத்தின் மனைவி ஜெயந்திக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. 

வீட்டில் விவேக் இல்லாத  நேரத்தில் நாங்கள் தனியாக சந்தித்து வந்தோம். இந்த விஷயம் விவேக்கிற்கு தெரியவந்ததால் ஜெயந்தியை பலமுறை கண்டித்துள்ளார். இதனால் கோபமான ஜெயந்தி விவேக்கை  கொன்றால்தான் நாம் சந்தோஷமாக வாழ முடியும் என்று சொன்னார். அவரே சொல்கிறாரே என்று நானும் அவரை கொலை செய்யும் முயற்சியில் இறங்கினேன்.

மே1-ம் தேதி கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்கு விவேக் வந்தார். அங்கு நான் விவேக்கை கத்தியால் குத்தினேன். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் துடிதுடித்து இறந்த அவரை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டி, கழிவறை தொட்டியில் போட்டு மறுத்துவிட்டேன்.

விவேக் பிரசாத் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசை நம்ப வைக்க அவரது மோட்டார் சைக்கிளை கடற்கரை பகுதியில் நிறுத்தி விட்டு ஹெல்மெட்டை கடலில் வீசி விட்டேன். போலீசார் என்னிடம் விசாரித்தனர். நானும் முதலில் மறுத்தேன். போலீசார் தீவிரம் காட்டியதால் தலைமறைவானேன். இந்தநிலையில் சுல்தான்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த போலீசார் என்னை கைது செய்தனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!