இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டம் பெற்றவர்கள் தான் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்புக்கு எம்.பி. சு. வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்க இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் M.Phil., பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் சென்னை தரமணியில் உள்ளது. இங்கு பணிபுரிவதற்காக பகுதி நேர கௌரவ விரிவுரையாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிகாயிகுய்ள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில் இடம்பெற்ற கல்வித்தகுதி விவரம் சர்ச்சைக்கு உரியதாக மாறிவிட்டது.
டாஸ்மாக் கடைகள் மூடல் திசைதிருப்பும் நடவடிக்கை: ஜெயக்குமார் விமர்சனம்!
தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர்
திரைப்பட பயிற்சி நிறுவனத்தின்
பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றவராக ஏன் இருக்க வேண்டும்?
இந்த அறிவிப்பின் மீது மாண்புமிகு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். pic.twitter.com/wyPls5lXJD
"1. Diploma / Bachelor of Visual Arts in respective courses: 2. தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிப் பாடங்களில் முதுநிலை அல்லது M.Phil., பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்" அறிவிப்பில் உள்ள கல்வித்தகுதி பகுதியில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
நாளிதழ்களில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பைப் பார்த்த மதுரை எம். பி. சு. வெங்கடேசன் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த கல்வித்தகுதி நிபந்தனையை கண்டித்து ட்விட்டர் பதிவிட்டிருக்கிறார். “தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் பகுதி நேர கௌரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றவராக ஏன் இருக்க வேண்டும்?” என அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மேலும், இந்த அறிவிப்பின் மீது முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை கண்டு நடுங்கிக் கொண்டு இருக்கிறார் - சி.வி.சண்முகம் விமர்சனம்