உங்கள் பிள்ளைகளை ஏன் அரசு பள்ளிகளில் சேர்க்க கூடாது? நீதிபதி சரமாரி கேள்வி

 
Published : Jun 27, 2017, 04:59 PM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
உங்கள் பிள்ளைகளை ஏன் அரசு பள்ளிகளில் சேர்க்க கூடாது? நீதிபதி சரமாரி கேள்வி

சுருக்கம்

Why dont you join your children in a government school

அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்பதை ஏன் கட்டாயம் ஆக்கக்கூடாது? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

பந்தநல்லூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க தமிழக அரசிடம் அனுமதி கோரியும் அனுமதி மறுக்கப்பட்டதால் பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தமிழக அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.

இந்நிலையில் நீதிபதி கிருபாகரன் கூறுகையில், அரசு பள்ளிகளில் அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கப்படக்கூடாது. அரசு பள்ளியில் சேர்க்காமல் பெற்றோர்கள் ஏன் தனியார் பள்ளியில் சேர்க்கிறார்கள்? பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதற்கு காரணம் என்ன? ஆசிரியர் சங்கங்கள் தொடங்க ஏன் தடை விதிக்க கூடாது? ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக்கூடாது. என அடுத்தடுத்து கேள்களை எழுப்பினார்.

மேலும் ஆசிரியர்கள் கடமைகளை செய்யாவிடில் மாணவர்களையராலும் காப்பாற்றமுடியாது. இதுமட்டுமல்ல கிராம மலைப்பகுதி ஆசிரியர்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

சரியான நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? ஆசிரியர்கள் வருகையை சிசிடிவி கேமராக்கள் வைத்து கண்காணிக்காதது ஏன்?

2012 அரசாணைப்படி எத்தனை அரசு பள்ளியில் ஆங்கிலவழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது? எத்தனை மாணவர்கள் ஆங்கில வழி கல்வியில் படிக்கின்றனர்? ஆங்கில வழிக்கல்வி எனில் தமிழில் வகுப்பு எடுப்பவர்கள் ஆங்கிலத்தில் எடுப்பார்களா?

என்று கேட்ட நீதிபதி 2 வாரத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய  உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கு விசாரணை அடுத்த மாதம் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை