சிலை கடத்தல் அதிகாரிகளை விடாதீர்கள் -கான்ஸ்டபிளின் அதிர்ச்சி கடிதம்.... ! NEWSFAST EXCLUSIVE...!!

Asianet News Tamil  
Published : Jun 27, 2017, 04:45 PM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
சிலை கடத்தல் அதிகாரிகளை விடாதீர்கள் -கான்ஸ்டபிளின் அதிர்ச்சி கடிதம்.... ! NEWSFAST EXCLUSIVE...!!

சுருக்கம்

Do not let the idol smuggling officers - by constable letter

சிலைகடத்தல் தடுப்பு விவகாரம் பெரிய புயலை கிளப்பி உள்ளது. இதில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் இருந்த காவலர் ஒருவர் வழக்கறிஞர் யானை ராஜேந்திரனுக்கு எழுதிய கடிதத்தில்  பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். 

சிலைகள் ஒரு விவசாயிடம் இருக்கும் விபரம் தெரிந்து அவனை மிரட்டி சிலைகளை பறித்ததும் பின்னர் அதை ஆய்வாளர் காதர் பாட்சா , உதவி ஆய்வாளர் சுப்புராஜ்  இருவரும் சிலைகளை சென்னை கொண்டு வந்து சிலைகடத்தல் தடுப்பு மன்னன் தீனதயாளனிடம் 2 சிலைகளை ரூ.25 லட்சத்துக்கு விற்றுள்ளனர்.

 

பின்னர் மற்ற சிலைகளையும் இன்ஸ்பெக்டர் காதர் பாட்சா வேறு வேறு நபர்களுக்கு விற்றுள்ளார்.

இது பற்றிய முழு விபரங்களையும் கடிதமாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரனுக்கு எழுதியுள்ள காவலர் ஒருவர் தான் கடைசி காலத்தில் பாவத்தை சுமக்க விரும்பவில்லை மேலும் இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட ஓய்வு பெற்ற டிஎஸ்பி மரணமும் தன்னை பாதித்ததாக கூறி நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுள்ளார். 

 

கடிதத்தை நியூஸ் ஃபாஸ்ட் வாசகர்களுக்காக தருகிறோம். இந்த விவகாரம் சம்பந்தமாக உதவி ஆய்வாளர் சுப்புராஜை போலீசார் நேற்று கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 23 January 2026: NDA பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வருகை
பிரதமர் இன்று தமிழகம் வருகை..! கூட்டணி தலைவர்களுடன் மேடையேறும் மோடி..