
மதுரை அருகே பள்ளி சுற்றுச்சுவர் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி சாலையில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு மதிய உணவு இடைவேளையின் போது பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உணவு வழங்கி கொண்டிருந்தனர்.
இதையடுத்து மூன்று பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் பவித்ரா என்ற மாணவி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் இதனை கண்டித்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.