முதலமைச்சரின் உடல்நிலை குறித்த தகவலால் தமிழகம் முழுவதும் பரபரப்பு!

First Published Dec 5, 2016, 12:53 AM IST
Highlights


முதலமைச்சரின் உடல்நிலை குறித்த தகவலால் தமிழகம் முழுவதும் பரபரப்பு!

 

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல் பரவியதையடுத்து, தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகள், இரவு நேரக்கடைகள் உடனடியாக மூடப்பட்டன.

 

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அப்பலோ மருத்துவமனை முன்பு நூற்றுக்கணக்கான பாேலீசாா் குவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள், அஇஅதிமுக நிர்வாகிகள், தாெண்டர்கள், பாெதுமக்கள் என மருத்துவமனை முன்பு கூட்டம் தாெடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

இதனிடையே, முதலமைச்சரின் உடல்நிலை குறித்து பரவிய தகவலால், சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் பங்குகள் அனைத்தும் இரவு 11 மணியளவில் இருந்தே  மூடப்பட்டன. கடைகள் அடைக்கபப்ட்டன. சாலைகள் வெறிச்சோடின. வெளியூர் செல்லும் பயணிகள் பெரும்பாலானோர் தங்களது பயணத்தை ரத்து செய்தனர். விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மறிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

இந்நிலையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து, குடியரசு தலைவா் திரு. பிரணாப் முகர்ஜி, பிரதமர் திரு. நரேந்திர மாேடி, திரு. ராஜ்நாத் சிங், திரு. ஜே,பி, நட்டா ஆகியோா் தாெலைபேசி மூலம் கேட்டறிந்ததாக தகவல்கள்  தொிவிக்கின்றன. திமுக தலைவர் திரு. மு. கருணாநிதி, தமிழக எதிா்க்கட்சி தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் உள்ளிட்டாேர் முதலமைச்சர் நலம்பெற வாழ்த்து தொிவித்துள்ளனர். 

click me!