அப்பல்லோவில் இருந்து 10 நிமிடங்களில் புறப்பட்ட ஆளுநர்

First Published Dec 5, 2016, 12:44 AM IST
Highlights


அப்பல்லோவில் இருந்து 10 நிமிடங்களில் புறப்பட்ட ஆளுநர்

 

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழக ஆளுநராக பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் இன்று இரவு அவசர, அவசரமாக சென்னை அப்போல்லோ மருத்துவமனைக்கு வந்து 10 நிமிடங்களில் புறப்பட்டு சென்றார்.

 

உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தார். 

 

தீவிர சிகிச்சைகள் பலனாக, முதல்வர் ஜெயலலிதா உடல் நலன் தேறி வந்த நிலையில், இன்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து  இதய மற்றும் சுவாசவியல் நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், தமிழக முதல்வருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட செய்தி அறிந்ததும் தமிழக ஆளுநராக பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னை புறப்பட்டு வந்தடைந்தார். சரியா இரவு 11.30 மணிக்கு வந்த ஆளுநர் வித்தியாசாகர் ராவ். அப்பல்லோ மருத்துவமனைக்கு சரியாக இரவு 12 மணிக்கு  வந்தார்.

அங்கு மருத்துவர்களையும், சிறப்பு மருத்துவர்களையும் கலந்து ஆலோசித்தார். அப்போது அவர் முதல்வர் உடல்நிலை குறித்த தகவல்களைக் கேட்டறிந்தார். அங்கு 10 நிமிடங்கள் மட்டுமே இருந்த ஆளுநர் வித்தியாசாகர் ராவ் மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார்.

 

 

click me!