பிரதமர் மோடி சென்னை வர வாய்ப்பு….

Asianet News Tamil  
Published : Dec 05, 2016, 12:25 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
பிரதமர் மோடி சென்னை வர வாய்ப்பு….

சுருக்கம்

பிரதமர் மோடி சென்னை வர வாய்ப்பு….

 

சென்னை அப்போல்லோவில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரின் உடல் நிலை குறித்து விசாரிக்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

 

இவருடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் வருகிறார் எனத் தெரிகிறது.

 

உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வரின் உடல் நலன் தேறி வருவதாக கூறப்பட்டு வந்தது. முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என கூறப்பட்ட நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு   இதய மற்றும் சுவாசவியல் நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், மாரடைப்பால் தீவிர சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறைஅமைச்சர் ராஜ்நாத்சிங்கும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல்களை அடிக்கடி, தனக்கு தந்து கொண்டு இருக்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தெரியவும், நலம்விசாரிக்கவும் பிரதமர் மோடி சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு இடியாய் இறங்கிய அதிர்ச்சி... தவெகவில் இருந்து விலகும் மிக மிக முக்கியப் புள்ளி..!
திமுக எம்.எல்.ஏ.வின் கொடூர செயல்.. ஆதாரம் இருந்தும் வேடிக்கை பார்க்கும் முதல்வர்.. விஜய் ஆவேசம்!