விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் யாருக்கு சென்றது?

By SG Balan  |  First Published Jul 13, 2024, 6:41 PM IST

அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்துவிட்ட நிலையில், அதிமுகவின் வாக்குகளைக் கவர நாதகவும் பாமகவும் போட்டியிட்டன. ஆனால், அதிமுக ஆதரவாளர்கள் அதிக அளவில்  திமுகவுக்கு வாக்கு செலுத்தியுள்ளனர் என்று தெரிகிறது. 


விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடக்கம் முதலே ஒவ்வொரு சுற்றிலும் அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருந்தார். இறுதியில் 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றியை உறுதி செய்தார். தோல்வி அடைந்த பாமக வேட்பாளர் சி. அன்புமணி 56,296 வாக்குகள் பெற்று டெபாசிட் வாங்கியிருக்கிறார். 10,602 வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. நோட்டாவுக்கு 859 வாக்குகள் கிடைத்துள்ளன.

Tap to resize

Latest Videos

இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்துவிட்ட நிலையில், அதிமுகவின் வாக்குகளைக் கவர நாதகவும் பாமகவும் போட்டியிட்டன. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஜெயலலிதா படத்தை பிரச்சார மேடையில் பயன்படுத்தி, அதிமுகவின் வாக்குகளைக் கவர முயன்றார். அதிமுகவுக்கும் பாமகவுக்கும் பொது எதிரி திமுக என்று கூறு அதிமுக ஆதரவாளர்கள் பாமகவுக்கு ஓட்டு போட வேண்டும் என்று கோரினார்.

13 தொகுதி இடைத்தேர்தல்: அதிக இடங்களைக் கைப்பற்றி கெத்து காட்டும் இந்தியா கூட்டணி! பாஜகவுக்கு பின்னடைவு!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தில் அதிமுகவுடன் ஒத்துப்போனார். திமுக அரசைக் கண்டித்து அதிமுக நடத்திய ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார். இதனால், அதிமுக ஆதரவாளர்கள் நாதகவுக்கு ஓட்டு போட்டுவிடுவார்கள் என்று நாதக நம்பியது.

ஆனால், தேர்தல் முடிவுகளில் திமுக 63.22% வாக்குகளைப் பெற்றுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாகக் களம் கண்ட பாமகவுக்கு 28.69% வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தக் கட்சிக்கு 5.4% வாக்குகளை மட்டுமே மக்கள் வழங்கியுள்ளனர்.

இதிலிருந்து, அதிமுக தேர்தலைப் புறக்கணித்திருந்தாலும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் அதிக அளவில்  திமுகவுக்கு வாக்கு செலுத்தியுள்ளனர் என்று தெரிகிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்த பாமகவை புறக்கணித்து இருப்பதன் மூலம் திராவிடக் கட்சிகளுக்கு இடையில்தான் போட்டி என்பது உறுதியாகியுள்ளது.

விக்கிரவாண்டி தேர்தல் வாக்குப்பதிவின் போது, 276 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 1,95,495 வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு சதவீதம் 82.48 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அம்பானி வீட்டுத் திருமணத்தில் எல்லார் கண்ணும் இஷா அம்பானியின் நெக்லஸ் மேலதான்... என்ன விசேஷம் தெரியுமா?

   

click me!