தமிழகத்தில் 9 மாவட்டங்ககளுக்கு குட் நியூஸ்! அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

By SG Balan  |  First Published Jul 13, 2024, 5:18 PM IST

திருவள்ளூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

கடந்த சில நாட்களாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒரிரு இடங்களில் அவ்வப்போது லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மாலை நேரத்தில் மழை பெய்வதாகக் கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், அண்மையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

திருவள்ளூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யுக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13 தொகுதி இடைத்தேர்தல்: அதிக இடங்களைக் கைப்பற்றி கெத்து காட்டும் இந்தியா கூட்டணி! பாஜகவுக்கு பின்னடைவு!

click me!