தடுப்பூசி போடாதவர்கள்... வெளியே வரக்கூடாது… - “அரசு அதிரடி அறிவிப்பு ! “

By Raghupati RFirst Published Dec 5, 2021, 10:59 AM IST
Highlights

தடுப்பூசி போடாதவர்கள் வெளியே வரக்கூடாது என்று அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துள்ளது.ஒமைக்ரான் உலகம் முழுவதும் பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனவை விட இது அதிக வீரியமுள்ளது ஆகும். எனவே உலகின் அனைத்து நாடுகளும் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு நாடுகளில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அச்சம் காரணமாக முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் மிகப்பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

2-வது அலையால் பயந்துபோன மக்கள் அவசர அவசரமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள். 2-வது அலை கட்டுக்குள் வர மீண்டும் ஆர்வம் குறைந்தது. தற்போது ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்த உருமாற்றம் வைரஸை தடுப்பூசியால் மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியாது என வல்லுனர்கள் தெரிவித்து வருகிறார்கள். 

இதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 3-வது அலையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.இதனால் ஒவ்வொரு மாநிலங்களும் தடுப்பூசி செலுத்தும் பணியை மிக வேமாக துரிதப்படுத்தியுள்ளது. அந்த வகையில் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில்  தடுப்பூசி செலுத்திக் கொள்ளவது கட்டாயம் என அம்மாநில சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரியில் 77 சதவிதத்தினர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ள நிலையில்விடுப்பட்டவர்கள் சிறப்பு முகாம்களில் செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் சிலர் முன்வராத காரணத்தினால் கட்டாயம் கொரோனா தடுப்பூசி சட்டம் புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.புதுச்சேரி பொது சுகாதார சட்டம் 1973ன் பிரிவு 54(1)விதியின் கீழ் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.மீறி வெளியே நடமாடினால் தண்டிக்கப்படுவார்கள் என உத்தரவிடப்ட்டுள்ளது.

சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘புதுச்சேரி பொது சுகாதாரச் சட்டம், 1973 இன் பிரிவு 8 மற்றும் பிரிவு 54(1)ன் படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் ஆக்கப்படுவதாகவும், தடுப்பூசி போடாதவர்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதை மீறி பொது இடங்களுக்கு வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என அந்த செய்திக்குறிப்பில் கூறப்படுள்ளது.

click me!