சென்னையில் எந்தெந்த சாலைகளில் இயக்க முடியும்? தாழ்தள பேருந்துகள் குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி!!

By Narendran SFirst Published Feb 6, 2023, 11:31 PM IST
Highlights

சென்னையில் எந்தெந்த சாலைகளில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும் என தமிழக பொக்குவரத்து துறையிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

சென்னையில் எந்தெந்த சாலைகளில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும் என தமிழக பொக்குவரத்து துறையிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னதாக தமிழக போக்குவரத்து கழகங்களுக்காக ஆயிரத்து 107 பேருந்துகள் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டது. அதன்படி பேருந்துகள் கொள்முதல் செய்யும் போது மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் தாழ்தள பேருந்துகளையே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இதையும் படிங்க: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியதன் எதிரொலி.... தமிழகத்திற்கு குழுவை அனுப்பியது மத்திய அரசு!!

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இருவகையான பேருந்துகளும் எவ்வாறு மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதுவாக இயக்கப்படும் என்பது தொடர்பான செய்முறை விளக்கத்தை வழங்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக போக்குவரத்து துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், 650 மில்லி மீட்டர் உயரம் கொண்ட தளங்களுடன் கூடிய பேருந்துகளை உற்பத்தி செய்ய ஒரு நிறுவனம் மட்டுமே தயாராக உள்ளது.

இதையும் படிங்க: கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கு… ஜமேஷா முபினின் மனைவி ரகசிய வாக்குமூலம்!!

அதற்கும் 14 மாதங்கள் ஆகும். சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் 442 தாழ்தள பேருந்துகளும் மூன்று மாதங்களில் இயக்கப்படும். 100 மின்சார தாழ்தள பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு சென்னையில் எந்தெந்த சாலைகளில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்.9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

click me!