
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை பெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்ய தமிழகம் வந்துள்ள கொல்கத்தா போலீஸ் அவர் எங்கு இருக்கிறார் என தெரியாமல் திணறி வருகின்றனர்.
நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறிய பிரச்சனையில் தமிழகத்தைச் சேர்ந்த கொல்கத்தா உயர்நீதிமனற் நீதிபதி கர்ணனுக்கு நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக, ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து கர்ணனை கைது செய்ய சென்னை வந்த கொல்கத்தா போலீசார், தமிழக போலீசாருடன் ஆலோசனை நடத்தினர். முதலில் நீதிபதி கர்ணன் ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் வழிபாடு நடத்த சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனால் அங்கு சென்று அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர்.
ஆனால் நீதிபதி கர்ணன் ஆந்திராவின், தடா மாவட்டத்தில் இருப்பது மொபைல் போன் சிக்னல் மூலம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்ய கொல்கத்தா போலீசார் ஆந்திரா கிளம்பி சென்றனர்.
தடா நகரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து நீதிபதி கர்ணன் இருக்கும் இடம் தெரியாமல் கொல்கத்தா போலீசார் திணறினர்.
இந்லையில் நீதிபதி கர்ணனிள் செல் போன் அணைத்து வைக்கப்பட்டதால் சிக்னல் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் எங்கு இருக்கிறார் என தெரியாததால் கொல்கத்தா போலீசார் சென்னை திரும்பினர்.
அதே நேரத்தில் நீதிபதி கர்ணனின் கார் டிரைவரின் மொபைல் போன் சிக்னலை வைத்து கர்ணன் இருப்பிடத்தை தேடி வருகின்றனர்.