புதுச்சேரி அருகே சிறுவன் கொடூர கொலை…தலையை வெட்டி காவல் நிலையத்துக்குள் உருட்டிவிட்டுச் சென்ற தில் ரவுடிகள்…

 
Published : May 11, 2017, 06:29 AM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
புதுச்சேரி அருகே சிறுவன் கொடூர கொலை…தலையை வெட்டி காவல் நிலையத்துக்குள் உருட்டிவிட்டுச் சென்ற தில் ரவுடிகள்…

சுருக்கம்

puduchery boy murder

புதுச்சேரி அருகே சிறுவன் கொடூர கொலை…தலையை வெட்டி காவல் நிலையத்துக்குள் உருட்டிவிட்டுச் சென்ற தில் ரவுடிகள்…

புதுச்சேரி அருகே மர்ம கும்பல் ஒன்று 17 வயது சிறுவனின் தலையை வெட்டி காவல் நிலையத்துக்குள் வீசிச் சென்ற கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் பர்கூரைச் சேர்ந்தவர் சுவேதன். 17 வயது நிரம்பிய இந்த சிறுவன் அப்பகுதியில் ரவுடி போல செயல்பட்டு வந்துள்ளார். கொலை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், அண்மையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் மர்ம கும்பல் ஒன்று  சுவேதனை கடத்திச் சென்று பர்கூர் ஏரிக்கரையில் வைத்து கொலை செய்து அவரது தலையை வெட்டிச் சென்றது.

பின்னர் அந்த கும்பல் சுவேதனின் தலையை கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து காம்பௌண்டுக்குள் வீசி சென்றது.

பதைபதைக்க வைக்கும் இந்த காட்சி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தலையை மர்ம கும்பல் வீசிச் சென்றபோது, காவல் நிலையத்தில்,. ஏராளமான பொது மக்கள் இருந்துள்ளனர். மர்ம  கும்பலின்  வெறிச்செயலைப் பார்த்த பொதுமக்கள் அங்கிருந்த தலைதெறிக்க ஓடினர்.

இதையடுத்து புதுச்சேரி போலீசார் பர்கூர் ஏரிக்கரையில் இருந்த சுவேதனின் உடலை மீட்டுள்ளனர். அதே நேரத்தில் ரெட்டிசாவடி கடலூர் மாவட்ட எல்லைக்குள் வருவதால் எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் இந்த கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

மர்ம நபர்கள் சிலர் சிறுவனை கொலை செய்து தலையை வெட்டி காவல் நிலையைத்துக்குள் வீசிச் சென்ற கொடூரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

100 கி.மீ. வேகம்.. விளம்பர பலகையில் பைக் மோதி பயங்கர விபத்து.. தலை துண்டாகி துடித்த மருத்துவ மாணவர்கள்
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!