
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க, இன்று நடிகர் ரஜினிகாந்த் அங்கு சென்றிருக்கிறார். அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து, இப்போதெல்லாம் சமுதாயப் பிரச்சனைகளின் போது, தன் பங்கிற்கு சில செயல்களை செய்து வருகிறார் ரஜினிகாந்த். அதில் ஒன்று தான் இன்று அவர் தூத்துக்குடிக்கு மேற்கொண்டிருக்கும் பயணம்.
தூத்துக்குடிக்கு செல்லும் முன்பு, அவரிடம் பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ரஜினி “ என்னை பார்த்தால் மக்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள்” என தெரிவித்திருந்தார். அங்கு அவ்வளவு பெரிய துயரச்சம்பவம் நிகழ்ந்திருக்கு இவர் என்னனா? அங்க போகும் போது கூட இப்படி பேசுராரே? என ரஜினியை திட்டி தீர்த்தனர் நெட்டிசன்கள். அவர்களின் கோபம் எல்லாம் வீணானது என்பது போல இருந்தது, தூத்துக்குடியில் ரஜினிக்கு கிடைத்த வரவேற்பு.
உண்மையாகவே ரஜினியை சந்தித்தபோது மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களும், அவர்கள் உறவினர்களும், ரஜினியிடம் சிரித்து பேசி இருக்கின்றனர்.
மேலும் பலர் தங்கள் செல்ஃபோனில் ரஜினியை புகைப்படமும் எடுத்திருக்கின்றனர். அவருடன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சம்பவங்களை எல்லாம் பார்த்துவிட்டு, நாம தான் கொஞ்சம் அதிகமா பொங்கிட்டோம் போல? என நொந்திருக்கின்றனர் நெட்டிசன்கள்.
என்ன தான் போராட்ட குணம் இருந்தாலும் “அரசியலில் யார் மூலமாவது ஒரு மாற்றம் வராதா? அதன் மூலம் நமக்கு விடிவு வராதா? சினிமாவில் செய்வது போல் இவர்களால் தான் நிஜத்தில் நன்மை நடக்குமோ? என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அப்பாவி பாமர மக்களாகத்தான், இன்னும் நம் மக்கள் இருக்கிறார்கள், என எண்ணி வருந்த வைத்திருக்கிறது இந்த செயல்கள்.