
CBSE and TN Govt schools: தமிழ்நாடு இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட கல்வி, பொருளாதாரத்தில் சிறந்து விளங்குகிறது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ (CBSE), தேசிய திறந்தநிலை பள்ளி (NIOS) மற்றும் ஐசிஎஸ்இ (ICஸே) ஆகிய பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வருகின்றன.
குழந்தைகளை எந்த வயதில் சேர்க்கலாம்?
இத்ல் சிபிஎஸ்இ அல்லது மாநில பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை எந்த வயதில் சேர்க்கலாம்? என்பது குறித்து பார்ப்போம். தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மார்ச் 1-ம் தேதியில் இருந்து 2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டது. பல தனியார் பள்ளிகளில் ஏற்கனவே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் நிலையில், தனியார் பள்ளிகளில் நர்சரி வகுப்பு முதல் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. சமச்சீர் கல்வி மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்களை எப்போது சேர்க்க வேண்டும் என்ற சந்தேகம் பெற்றோர்களுக்கு எழலாம். அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பில் குழந்தைகளை சேர்க்க 5 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இன்று முதல் 8ம் தேதி வரை! பொதுமக்களுக்கு வானிலை மையம் அலர்ட்!
சிபிஎஸ்இ பள்ளி சேர்க்கை வயது வரம்பு என்ன?
சிபிஎஸ்இ பள்ளிகளில் வயது வரம்பு மார்ச் 31-ம் தேதியின் அடிப்படையில் இருக்க வேண்டும். சிறப்பு தேவைகள் இருக்கும் குழந்தைகளுக்கு வயது வரம்பில் 2 வருடங்கள் வரை தளர்வு உள்ளது. சிபிஎஸ்இ நர்சரி வகுப்பில் குழந்தைகளை சேர்க்கும் வயது 3 வயதில் இருந்து 4 வயதிற்கு குறைவாக உள்ளது. சிபிஎஸ்இ எல்.கே.ஜி வகுப்பில் 4 வயதில் இருந்து 5 வயதிற்கு குறைவாக உள்ளது.
சிபிஎஸ்இ யு.கே.ஜி வகுப்பில் 5 வயதில் இருந்து 6 வயதிற்கு குறைவாக உள்ளது. 1-ம் வகுப்பில் குழந்தைகளை சேர்க்கும் வயது 6 ஆக உள்ளது. சமீபகாலமாக சிபிஎஸ்இ கீழ் இயங்கும் சில பள்ளிகளில் வயது வரம்பு கட்டாயமாக பின்பற்றப்படுகிறது. அதாவது மார்ச் 31ம் தேதிப்படி 6 வயது இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீயா.? நானா.? பொன்முடி- செஞ்சி மஸ்தான் மீண்டும் மோதல்- விழுப்புரத்தில் தள்ளாடும் திமுக