ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியான சாந்தன், உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உயிரிழந்தார். முக்கிய குற்றவாளியான ஒற்றைக்கண் சிவராசனுடன் நெருங்கிய நட்பில் சாந்தன் இருந்தாக கூறப்படுகிறது. மேலும் விடுதலை புலிகள் அமைப்பில் புலனாய்வு பிரிவு உறுப்பினராகவும் சாந்தன் செயல்பட்டுள்ளார்.
ராஜீவ் கொலை சம்பவம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான சாந்தன் தனது சொந்த நாட்டிற்கு செல்ல தயாராக இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடபைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இந்தநிலையில் யார் இந்த சாந்தன், ராஜீவ் காந்தி கொலையில் சிக்கியது எப்படி என்பதை பார்க்கலாம்.. கடந்த 1991-ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூருக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வந்தார். அப்போது அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக குண்டு வெடித்ததில் மனித உடங்கள் பல இடங்களில் சிதறியது. புகை மண்டலுமும் நெருப்பு மண்டலுமும் மூண்டது.
யார் இந்த சாந்தன்.?
இதனால் ராஜீவ் காந்தி என்ன ஆனார் என தேடிய போது, அவர் அணிந்திருந்த ஷூவை அடையாளமாக வைத்து அவரது கால் மற்றும் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ராஜீவ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சிவராசனுடன் நெருக்கமாக இருந்தவர் தான் சாந்தன், சிவராசனுடன் ஏப்ரல் 1991 இல் தமிழ்நாட்டிற்கு வந்தார். சாந்தன் விடுதலை புலி இயக்கத்தில் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் என கூறப்படுகிறது. மேலும் சென்னையில் மெட்ராஸ் இன்ஜினியரிங் டெக்னாலஜி நிறுவனத்தில் படித்ததாகவும், அதற்க்கான செலவை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டாதாகவும் கூறப்படுகிறது.
7 பேர் விடுதலை போராட்டம்
ராஜீவ் கொலையாளிகள் 7 பேருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.இதனையடுத்து சட்ட போராட்டத்தின் மூலம் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்தநிலையில் சிறையில் 30 ஆண்டுகளுக்கு மேல் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்க கோரி குரல் எழுந்தது. இதற்கு ஒரு தரப்பு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. தமிழக சட்டப்பேரவையில் 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இருந்து போதும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காத காரணத்தால் சிறை வாழ்க்கை தொடர்ந்தது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், 30 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டனர். இதில் சாந்தன் இலங்கையை பூர்வீகம் கொண்டவர் என்பதால் திருச்சியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
சாந்தன் மரணம்
நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதில் மத்திய மற்றும் மாநில அரசு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ஒரு சில நாட்களில் தனது சொந்த நாடான இலங்கைக்கு செல்ல இருந்தார், திடீரென சாந்தனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் சென்னைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை மாரடைப்பு ஏற்படுட் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தமிழ் ஆர்வர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
Santhan Passed Away: திடீர் மாரடைப்பு.. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார்..!