கடந்த ஜனவரி 24ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 27ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சாந்தன் இன்று காலை 7.50 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2022ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
undefined
இதையும் படிங்க: குலசையில் புதிய ராக்கெட் ஏவுதளத்துக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
தற்போது திருச்சி சிறப்பு முகாமில் இருந்து வந்த சாந்தன் தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து சாந்தனை இலங்கை அனுப்பி வைக்க மத்திய அரசும் அனுமதி வழங்கியது. இந்நிலையில், கடந்த ஜனவரி 24ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. என்ன காரணம் தெரியுமா?
இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த சாந்தனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இததனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கடும் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தார். சிகிச்சை பலனின்றி சாந்தன் இன்று காலை 7.50 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.