என்னய்யா நடக்குது கட்சிக்குள்ள... தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டம் குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி

By SG Balan  |  First Published Nov 21, 2023, 12:27 AM IST

கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த கூட்டம் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் புகார் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், இந்தக் கூட்டம் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Tap to resize

Latest Videos

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், "தமிழக காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. காங்கிரஸ் கூட்டம் நடந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பத்திரிக்கையில் பார்த்த பின்புதான் தெரிந்தது. யாரையும் அழைக்காமல் கூட்டம் நடந்திருக்கிறது. இப்படிக் கூட்டம் நடத்த மர்மம் என்ன என்று தெரியவில்லை" எனத் கூறியுள்ளார்.

உள்நாட்டு எலக்ட்ரிக் கார் நிறுவனங்களுக்கு குட் நியூஸ்! EV உற்பத்தியை ஊக்குவிக்க புதிய சலுகை!

"கட்சியில் ஒரு கூட்டம் நடக்கிறது என்றால் எங்களை போன்றவர்களைக் கூப்பிடுவது வழக்கம். இன்று யாரையும் கூப்பிடாமல் கூட்டத்தை நடத்திவிட்டார்கள். அதில் என்ன பேசப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை" என்று இளங்கோவன் குறிப்பிட்டார். மேலும், "முதலில் எங்களை முன்னாள் தலைவர்கள் என்று சொன்னார்கள். பிறகு மூத்த தலைவர்கள் என்று சொன்னார்கள். இப்போது முடிந்து போன தலைவர்கள் என்று சொல்கிறார்கள்" என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பணிகளில் தீவிரமாக இருக்கிறது. தேர்தல் தொடர்பான செயல்திட்டங்களை வகுக்க மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மாவட்ட தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி மாவட்ட நிர்வாகிகளை கே.எஸ்.அழகிரி சந்தித்துள்ளார்.

இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் பேச்சு, தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டிப் பூசல் வெடிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மாநிலத் தலைவரான இளங்கோவனின் விமர்சனம் உள்கட்சி பூசலை மீண்டும் பொதுவெளியில் அம்பலப்படுத்தியுள்ளது.

சூப்பர் டர்க்யூ செயல்திறன் கொண்ட SUV கார்கள்! டாடா முதல் மஹிந்திரா வரை... எது பெஸ்டு?

click me!