கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழர்களுக்கு என்னாச்சு.! உள்ளே இவ்வளவு தமிழர்களா? பின்னணி நிலவரம்

By Raghupati RFirst Published Jun 3, 2023, 1:13 AM IST
Highlights

சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த தமிழர்களுக்கு என்ன ஆனது என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் உள்ள ஷாலிமார் நிலையத்தில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ( Coromandel Express) ஒடிசா மாநிலத்தில் தடம் புரண்டது.

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டரில், ஒடிசா மாநிலத்தில்  கோரமண்டல் விரைவு ரயில்  விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக  ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்னாயக் அவர்களைத் தொடர்புகொண்டு விபத்து குறித்துக் கேட்டறிந்தேன். அவர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது.

விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க  போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டிருக்கிறேன். உடனடியாக அவசர உதவி எண் உருவாக்கி உதவிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

மேலும் இவர்களுடன் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. தேசிய பேரிடர் மீட்பு படை குழு ஏற்கனவே விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளது, மற்ற குழுக்களும் மீட்பு பணியில் இணைய விரைந்துள்ளன.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.  இந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க..ஒரே பாதையில் வந்த ரயில்கள்.. சிக்னல் பிரச்னை.! கோரமண்டல் ரயில் விபத்தில் நடந்தது என்ன?

காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது. இரவு நேரம் என்பதாலும் வனப்பகுதி என்பதாலும் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாத பயணிகளுடன் சேர்த்து எத்தனை பேர் ரயிலில் சென்னக்கு வந்தனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ரயில் விபத்து தொடர்பாகத் தமிழ்நாடு அரசு உதவி எண் அறிவித்துள்ளன.

044 2859 3990, 94458 69843 ஆகிய தொலைப்பேசி எண்களில் தகவல் அறியலாம். ரயில் விபத்து தொடர்பாக உதவி பெற 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்தில் மொத்தம்எத்தனை பேர் பயணித்தனர், அவர்களில் யார் யாருக்கு என்ன ஆனது என்பது குறித்து தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..சென்னை சென்ட்ரல் மெயில் உட்பட 7 ரயில்கள் ரத்து.. திருப்பி விடப்பட்ட 5 ரயில்கள் - முழு பட்டியல் இதோ

click me!