Coromandel Train Accident : கோரமண்டல் ரயில் விபத்து.. ஒடிசா முதல்வருடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Published : Jun 02, 2023, 09:48 PM ISTUpdated : Jun 02, 2023, 11:00 PM IST
Coromandel Train Accident : கோரமண்டல் ரயில் விபத்து..  ஒடிசா முதல்வருடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சுருக்கம்

கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட கோரமண்டல் ரயில் புவனேஸ்வர் அருகே விபத்துக்குள்ளானது.

ஒடிசாவின் பாலசோரில் சரக்கு ரயில் மீது கோரமண்டல் விரைவு ரயில் மோதியதில் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பாலசோரில் உள்ள பஹானாகா நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து நடந்துள்ளது. மீட்பு பணிகள் தொடங்கப்பட்டு காயம் அடைந்தவர்கள் பாலசோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதியதில் 4 பெட்டிகள் தடம் புரண்டன. கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட ரயில் புவனேஸ்வர் அருகே விபத்துக்குள்ளானது. 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயிலில் பல பயணிகள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணிகள் துரிதமாக நடந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்து 91-67826286 என்ற அவசர கட்டுப்பாட்டு எண்ணை ஒடிசா அரசு அறிவித்துள்ளது. இரவு நேரம் என்பதாக கடும் சிரமத்திற்கு இடையே மீட்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மீட்பு பணிகள் குறித்து ஒடிசா முதல்வரிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின். தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு செய்யும் என ஒடிசா முதல்வரிடம் கூறினார் முதல்வர் ஸ்டாலின். ஒடிசா முதல்வரை தொடர்புகொண்டு பேசிய பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அமைச்சர் சிவசங்கர், 3 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒடிசா செல்ல உத்தரவிட்டுள்ளேன்  என்று அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க..Coromandel Express derails : கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து - 300க்கும் மேற்பட்டோர் காயம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

செல்போனில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க! தமிழகம் முழுவதும் நாளை 8 மணி நேரம் மின்தடை!
Tamil News Live today 10 December 2025: இவர்கள் டோல் கட்டணம் செலுத்த தேவையில்லை.. எல்லாமே இலவசம்.. முழு லிஸ்ட் உள்ளே