M. Karunanidhi Birth Anniversary : திராவிட இயக்கமும், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் வாழ்வும்

By Raghupati RFirst Published Jun 2, 2023, 9:37 PM IST
Highlights

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் என்பதால் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. கட்சி சார்பிலும் மிக பிரமாண்டமாக விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

திராவிட இயக்கத் தலைவர்களில் பெரும்பாலானோர் எழுத்தாளர்களாகவும் கவிஞர்களாகவும் இருந்தார்கள். கலைஞரின் கடிதங்கள் (3,517), நெஞ்சுக்கு நீதி ஆகிய நூல்களை நிச்சயம் படிக்க வேண்டும். இது ஆறு தொகுதிகளாக இது வந்துள்ளது. எழுத்தாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வன் எழுதிய 'கலைஞர் மு. கருணாநிதி வரலாறு' மற்றும் ஜெயரஞ்சன் எழுதிய 'திராவிடமும் சமூக மாற்றமும்' நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், கலைஞர் மு. கருணாநிதி வரலாறு' மற்றும் 'திராவிடமும் சமூக மாற்றமும்' ஆகிய 2 நூல்களும் அறிவு கருவூலங்கள்; போர் வாள்கள் என்று புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், "தலைவர் கலைஞரைப் பற்றி எத்தனையோ நூல்கள் வந்திருக்கின்றன. அவற்றில் முதன்மையான நூல்களில் இந்த நூலும் நிச்சயமாக இடம்பிடித்திருக்கிறது.திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, பொதுப்படையான அரசியல் வரலாற்று ஆய்வாளர்களும் படிக்கத் தக்க வகையில் செம்மையாக எழுதப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, நம்முடைய இந்து ராம் அவர்கள் சொன்னதுபோல, இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த நிலைப்பாடுகள் பற்றி விரிவாக தனது நேரடி அனுபவங்களின் மூலமாக நம்முடைய பன்னீர்செல்வன் எழுதி இருக்கிறார்.

'எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது' என்று பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகத்தைக் காட்டி, "எனக்கும் இங்கேதான் உறங்க வேண்டும்" எனக் கலைஞர் அவர்கள் மிக உணர்ச்சிவயமாகச் சொல்லும் பகுதி இந்த நூலில் வருகிறது. அதைப் படிக்கும்போது தலைவர் கலைஞரின் மறைவிற்குப் பிறகு, அவர் விரும்பிய இடத்தைப் பெற்றுத் தர நடத்திய போராட்டம் இன்றைக்கும் என்னுடைய கண்முன் வருகிறது.

தலைவர் கலைஞர் அவர்கள் யார் என்பதை இந்த நூலின் ஆசிரியர் அடையாளப்படுத்துகிறார். நவீன தமிழகத்தை உருவகப்படுத்தினால் அதுதான் கலைஞர் என்று சொல்கிறார். இதைவிட யாராலும் சரியாக சொல்ல முடியாது.திராவிட இயக்கத்தின் எழுச்சியை ஒருவர் அறிய வேண்டுமா? கலைஞரைப் பற்றிப் படித்தால் மட்டுமே போதும். தலைவர் கலைஞர் அவர்கள் பல்லாயிரக்கணக்கான தனிமனிதர்களோடு தனது தனிப்பட்ட உறவைப் பேணி வளர்த்து வந்திருக்கிறார், ஒவ்வொருவருக்கும் கலைஞரைப் பற்றிச் சொல்ல ஒரு கதை இருக்கிறது என்கிறார்.

ஒருவர் எழுதும் தன் வரலாறு நூலில் அந்த நான்காவது வாழ்க்கை பற்றிப் புலப்படும்" என்று கலைஞர் கூறுகிறார். அதற்கு, 'உங்கள் நூலில் நீங்கள் வாழ விரும்பிய வாழ்க்கையை விவரிக்கும் பகுதி எது?' என்று பன்னீர்செல்வன் கேட்கிறார். அப்போது கலைஞர் சொல்கிறார், 'அதை நீயே கண்டுபிடித்துக்கொள்' என்கிறார் கலைஞர். தலைவர் கலைஞர் அவர்கள் வாழ விரும்பிய வாழ்க்கை என்ன என்று நான் சிந்தித்தேன்... தான் இல்லாத பிறகும் தான் நினைக்கப்பட வேண்டும் என்பதுதான் கலைஞர் அவர்கள் விரும்பிய வாழ்க்கையாக இருக்கக்கூடியது.

அதற்கான உழைப்பைத்தான் அவர் தன் வாழ்நாள் முழுவதும் அளித்தார். இதை வைத்துப் பார்க்கும்போது கலைஞர் அவர்களது வாழ்க்கை நிகழ்காலத்தில் நிறைவாகவே இருக்கிறது" என்று கூறினார். இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வாழ்வும், திராவிட இயக்கமும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

click me!