CRIME : வீரமணி டூ வங்கி கொள்ளையர்கள் வரை.! அலறவிட்ட சென்னை என்கவுன்டர்கள்.! மரண பீதியில் ஓடி ஒளியும் தாதாக்கள்

By Ajmal KhanFirst Published Jul 14, 2024, 9:38 AM IST
Highlights

ரவுடிகளை கட்டுப்படுத்த முடியாமல் கையை விட்டு சட்டம் ஒழுங்கு செல்லும் போதெல்லாம், மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கவும், ரவுடிகள் மற்றும் தாதாக்களுக்கு எச்சரிக்கை விடுத்திடவும் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்படுகிறது.அந்த வகையில் சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் நடைபெற்ற என்கவுன்டர்களை பார்க்கலாம்

தமிழக என்கவுன்டர்கள்

ரவுடிகள் ராஜ்யத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்வி எழும்போதெல்லாம் ரவுடிகளை ஒடுக்க என்கவுன்டர் நடைபெறும். அந்த வகையில் நாட்டையே அதிர வைத்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் இதுவரை பல இடங்களில் என்கவுண்டர்கள் நடைபெற்றாலும் சென்னையில் பயங்கர கொலை குற்றவாளிகளையும் வங்கி கொள்ளையர்களையும் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Latest Videos

Encounter : யார் இந்த திருவேங்கடம்.? பகுஜன் சமாஜ் மாவட்ட தலைவர் கொலையிலும் தொடர்பா.? வெளியான பகீர் பின்னனி

இந்தநிலையில் சென்னை மற்றும் முக்கிய இடங்களில்  நடைபெற்ற என்கவுன்டர்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.. 

  • சென்னையில் முதல் என்கவுண்ட்டர் ஜூலை 30 1996-ம் ஆண்டு நடைபெற்றது. சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகே நடந்த என்கவுன்ட்டரில் அப்போதைய முக்கிய தாதாவான ஆசைத்தம்பி தனது கூட்டாளிகளுடன் போலீஸாருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

  • இதனை தொடர்ந்து 2003-ம் ஆண்டு வெங்கடேச பண்ணையார் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார், அதே ஆண்டு திருவல்லிக்கேணி அயோத்திக்குப்பம் தாதா வீரமணி கடற்கரையில் வெள்ளைத்துரை என்ற எஸ்.ஐ. மூலம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். 

 

  • 2006ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பங்க் குமார் என்பவர் கூடுதல் ஆணையர் ஜாங்கிட் தலைமையிலான போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி மற்றொரு முக்கிய தாதாவான வெள்ளை ரவியும் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டார்.

https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/who-is-thiruvenkadam-who-was-encountered-by-the-police-kak-sglft9

  • 2008ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி  சென்னையின் பிரபல ரவுடியான பாபா சுரேஷ் என்பவர் போலீஸ் பிடியிலிருந்து தப்பித்து பின்னர் காசிமேட்டில் பதுங்கியிருந்தபோது போலீஸார் பிடிக்க முயல வெடிகுண்டை எடுத்து பாபா சுரேஷ் வீச முயன்றார் இந்த சம்பவத்தில் பாபா சுரேஷ்  சுட்டுக் கொல்லப்பட்டார். 

 

  • அடுத்ததாக மிகப்பெரிய என்கவுண்டர் என்று பார்க்கும் போது சென்னையில் பல வங்கிகளில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த வட மாநில இளைஞர்களை போலீசார் தேடி வந்த நிலையில், பிஹாரைச் சேர்ந்த ஐந்து பேரை போலீஸார் வேளச்சேரியில் பிடிக்கச் சென்றபோது நடந்த மோதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

 

  • இதற்கு பின்னர் ஒரு சில என்கவுண்டர் ஆங்காங்கே நடைபெற்றாலும், இன்று காலை திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டது ரவுடிக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த என்கவுண்டர் காரணமாக ரவுடிகள் தலைமறைவாகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
click me!