300 கிளப்புக்கு கருணை வரவேற்ற சேவாக்…

 
Published : Dec 20, 2016, 11:50 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
300 கிளப்புக்கு கருணை வரவேற்ற சேவாக்…

சுருக்கம்

300 ஓட்டங்களை எடுத்தவர் கிளப்பிற்கு உங்களை வரவேற்கிறேன் என்று கருணை வாழ்த்தியுள்ளார் சேவாக்.

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கருண் நாயர் முச்சதம் எடுத்து பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கருண் நாயர் 381 பந்துகளில் 4 சிக்ஸர், 32 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 303 ஓட்டங்கள் குவித்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக்கிற்கு அடுத்தபடியாக முச்சதம் அடித்த 2-ஆவது இந்தியர் என்ற வரலாற்று சிறப்பைப் படைத்தார். கருண் நாயர் தனது 3-ஆவது போட்டியிலேயே முச்சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு முச்சதங்களை இருமுறை எடுத்த இந்திய வீரர் சேவாக், கருண் நாயருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

300 கிளப்புக்கு நல்வரவு. கடந்த 12 வருடங்கள் 8 மாதங்களாக நான் மட்டுமே தனியாக இருந்தேன் என்று சேவாக் வாழ்த்தியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"
மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு ...அதை வாக்குறுதியாக கொடுப்போம் ! MP கனிமொழி பேட்டி