விசைத்தறியாளர்கள் போராட்டம் வாபஸ் - பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால் முடிவு

 
Published : Apr 24, 2017, 03:06 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
விசைத்தறியாளர்கள் போராட்டம் வாபஸ் - பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால் முடிவு

சுருக்கம்

weavers protest withdraw

கடந்த 23 நாட்களாக நடைபெற்று வந்த விசைத்தறியாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததால் விசைத்தறியாளர்கள் 23 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து கோவையில் மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் தலைமையில் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் விசைத்தறியாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் கூலி உயர்வு வழங்க ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்புதல் அளித்தனர்.

இந்நிலையில், விசைத்தறியாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!