
தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், 2016 அக்டோபரில் நடத்த இருந்த உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்தார். புதிய அறிவிப்பாணை வெளியிட்டு, 2016 டிசம்பருக்குள் தேர்தலை முடிக்கவும் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. மே மாதம் 14க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தேர்தல் ஆணையர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தி 24ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது.
அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு, தேர்தல் ஆணையத்துக்கு தேவையான அனைத்து பணிகளையும் முடித்து கொடுத்தால், உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது.
மேலும், வேட்பார்ளகள் அறிவிப்பு, இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு சுழற்சி முறையில் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்த்து. இதை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் சார்பில், பிரணாம பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
குறிப்பாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு, ஜூலை 31ம் தேதிக்குள் தமிழக அரசு அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும். இந்த தேர்தலை நடத்துவது தமிழக அரசின் கையில் உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.