
மின்கட்டணம் செலுத்த மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்படும் என சட்டப் பேரவையில் அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் மானிய கோரிக்கை மீதான கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி இதனைத் தெரிவித்தார்.
தமிழக சட்டப் பேரவையில் மின்சார வாரிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ அபு பக்கரின் கேள்விக்கு மின்துறை அமைச்சர் தங்கமணி பதிலயித்துப் பேசினார்.
தமிழகத்தில் மின் இணைப்பு பெற நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மின் இணைப்புக்காக இனி மேல் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை என்றும், புதிய மின் இணைப்பு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
இதே போன்று மின் கட்டணம் செலுத்தும் முறையும் எளிதாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
இதன் ஒரு பகுதியாக மின் கட்டணம் செலுத்த மொபைல் ஆப் ஒன்று விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.