திருப்பதி பயணிகள் தங்கும் விடுதியையும் விட்டு வைக்காத ஜிஎஸ்டி - கட்டண உயர்வு இன்று முதல் அமல்…

First Published Jul 10, 2017, 10:56 AM IST
Highlights
Pricing hike from today in tirupati passenger hotel due GST


ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக      திருப்பதி ஏழுமலையான் கோயில் பயணிகள் தங்கும் விடுதிக் கட்டணம், திருமணமண்டபத்திற்குரிய கட்டணம், மற்றும் கோயிலில் விற்கப்படும் தங்க டாலர் விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்குவருகிறது.

நாடு முழுவதும் கடந்த 1 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வவி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதையடுத்து உணவு கட்டணங்கள், ஜவுளி உள்ளிட்டவைகள் உயர்ந்துள்ளன. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், திருப்பதியில் தங்கும் விடுதிக்கட்டணம் இன்று  முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு ரூ.1,000த்துக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் விடுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் கொண்ட விடுதிகளுக்கு 12 சதவீதமும், 2,500 ரூபாய்க்கு மேல் கட்டணம் கொண்டவிடுதிகளுக்கு 18 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜிஎஸ்டி வரி உயர்வால், தற்போது திருப்பதி கோயிலில் 1,500 ரூபாய் கொண்ட அறைக்கு, இனி 1,700 ரூபாயும், 2000ரூபாய் அறைக்கு இனி 2,200 ரூபாயும், 2,500 ரூபாய் கொண்ட கட்டண அறைக்கு இனி 3000 ரூபாயும், 3000 ரூபாய் கொண்டகட்டண அறைக்கு 3,500 ரூபாயும், 3,500 ரூபாய் கொண்ட கட்டண அறைக்கு 4,100 ரூபாயும், 4,000 ரூபாய் கொண்ட கட்டணஅறைக்கு 4,700 ரூபாயும், 4,500 ரூபாய் கொண்ட கட்டண அறைக்கு 5,300 ரூபாயும், 6000 ரூபாய் கொண்ட கட்டணஅறைக்கு 7,100 ரூபாயும் வசூலிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோயில் மண்டபத்தில் திருமணம் நடத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் ரூபாய் கட்டணத்துடன் 18 சதவீத ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட உள்ளது.

கோயிலில் விற்கப்படும் தங்க டாலர் விலையுடன் 3 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது.

லட்டுப் பிரசாதம், தலைமுடி விற்பனைக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக திருப்பதிதேவஸ்தானம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!