ஒகி புயல் முன்னெச்சரிக்கையை அரசிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டோம்...! பாலசந்திரன் தகவல்...!

 
Published : Dec 06, 2017, 02:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
ஒகி புயல் முன்னெச்சரிக்கையை அரசிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டோம்...! பாலசந்திரன் தகவல்...!

சுருக்கம்

We told the government about the storm warning

ஒக்கி புயல் முன்னெச்சரிக்கை தகவல், அரசுக்கு முறைப்படி தரப்பட்டது எனவும் வானிலை ஆய்வு மையத்துக்கு வந்த தகவல் அனைத்தும் அரசுக்கு தரப்பட்டுள்ளது எனவும் வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலசந்திரன் விளக்கமளித்துள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஒக்கி புயல் முன்னெச்சரிக்கை தகவல், அரசுக்கு முறைப்படி தரப்பட்டது என தெரிவித்தார். 

மேலும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகவும் ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தின் தென்கிழக்கே 1160 கிலோமீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெறிவித்துள்ளது. 

டிசம்பர் 8 ஆம் தேதி ஆந்திர கடற்கரையை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரக் கூடும் எனவும் தமிழகம் மீனவர்கள் அடுத்து 3 நாட்களுக்கு வங்க கடலில் ஆழ்கடல் பகுதிகளுக்கும், வட தமிழகம் தெற்கு ஆந்திர கடல் ஒட்டிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னையில் சில பகுதிகளில் ஒரிரு முறை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!