
செம்பரம்பாக்கம் எரி...! உஷார் ஆகும் நேரம் வந்துவிட்டது.....
சென்னையில் 2015 ஆம் ஆண்டு இறுதி நாட்களை யாராலும் மறந்து இருக்க முடியாது...சென்னையே தத்தளித்தது.... எங்கு பார்த்தாலும் மழை வெள்ளம்...வீடு, வீட்டு பொருட்கள், உயிரிழப்புகள் என மனதை ஒரு விதமான சிரமத்திற்கு கொண்டு போகும்...
இதற்கெல்லாம் காரணம்...தொடர்ந்து மழை பெய்ததுதான் என சொன்னால் அது சரியாக இருக்காது..ஏரி குளம் எல்லாம் எங்கிருக்கிறது என்று கூட தெரியாத அளவிற்கு குடியிருப்புகள் சென்னை பட்டினத்தில் பெருகி விட்டன.
சரி விஷயத்துக்கு வருவோம்......
சென்னையின் ‘தாய்மடி’ செம்பரம்பாக்கம் ஏரி. தலைநகரின் தண்ணீர் தாகத்தில், 40 சதவீதத்தை தணிப்பது செம்பரம்பாக்கம்தான். சென்னைவாசிகளால் பாசத்தோடு பார்க்கப்பட்ட இந்த ஏரி, சென்னையை மூழ்கடித்த மழை வெள்ளத்திற்குப் பிறகு, சற்று பயத்தோடு பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால்,பெரிய இடைவெளி இல்லாமல் மழை பெய்து கொண்டே இருக்கிறது...சில சமயம் கன மழையாகவும்,சில சமயம் மிதமான மழையாகவும் உள்ளது ...
இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை பொறுத்தவரை 30 சதவீதம் வரை மட்டுமே நிரம்பி உள்ளதாக தெரிவித்து உள்ளனர்....
ஆனால் அணையோ வேகமாக நிரம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கண்கூடாக கண்டு வரும் பொதுமக்கள்,எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன்னதாகவே தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு வசிக்கும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்
இதற்கு முன்னதாக,சரி வர பராமரிக்காமல் உள்ள ஒரு சிலபதகுகள் மற்றும் கலங்களில் பராமரிப்பு பணிகள் நல்ல முறையில் செய்யப்பட்டு உள்ளது என்ற அறிக்கையை பொதுப்பணித்துறை தெரிவித்து இருந்தது
ஆனால் முழுமையடையாத பராமரிப்பு நிலை தான் இன்றளவும் உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், புதியதாக உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் மழை அதிகரிக்க கூடும் என்பதாலும், மிக வேகமாக நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரியின் நிலைமையை குறித்தும் மக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
கண்டுகொள்ளுமா அரசு ? என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது....