இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.10 கோடிக்கு நிதி உதவி வழங்கி உள்ளோம் - சிவகங்கை ஆட்சியர் அறிவிப்பு...

Asianet News Tamil  
Published : May 29, 2018, 08:12 AM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.10 கோடிக்கு நிதி உதவி வழங்கி உள்ளோம் - சிவகங்கை ஆட்சியர் அறிவிப்பு...

சுருக்கம்

We have provided financial assistance for Rs 10 crore in this financial year - Sivagangai Collector

சிவகங்கை

2017 - 18-ஆம் நிதியாண்டில் மட்டும் 2247 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 81 இலட்சத்து 25 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் லதா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் லதா நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம் மூலமாக சமுதாயத்திலே ஏழை பெண்களிடையே கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்திலும், இளம் வயது திருமணத்தை தவிர்த்திடவும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணவும், 12-ஆம் வகுப்பு முடித்த பெண்ணின் திருமணத்திற்கு ரூ.25 ஆயிரமும், உடன் 8 கிராம் தங்கம் தாலி செய்வதற்கும் திருமண நிதி உதவியாக அப்பெண்ணின் பெற்றோருக்கு வழங்கப்படுகிறது. 

அதேபோல, பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு முடித்த பெண்ணின் திருமணத்திற்காக ரூ.50 ஆயிரமும், உடன் 8 கிராம் தங்கம் தாலி செய்வதற்கு அப்பெண்ணின் பெற்றோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

சிவகங்கை மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை ஏழு ஆண்டுகளில் ரூ.85 கோடியே 5 இலட்சத்து 75 ஆயிரம் திருமண நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி, 2011 - 12-ஆம் நிதியாண்டில் திருமண உதவித் திட்டங்களின்கீழ் 2525 பயனாளிகளுக்கு திருமாங்கல்யத்திற்கு தங்கத்துடன் கூடிய நிதியுதவி ரூ.8 கோடியே 9 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று 2012 -13-ஆம் நிதியாண்டில் 4159 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 72 இலட்சத்து 75 ஆயிரம் நிதி உதவியும், 2013 - 14-ஆம் நிதியாண்டில் 3219 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 95 இலட்சத்து 50 ஆயிரம் நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது.

2014 - 15-ஆம் நிதியாண்டில் 2902 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 65 இலட்சம் நிதி உதவியும், 2015 - 16-ஆம் நிதியாண்டில் 2700 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 28 இலட்சத்து 50 ஆயிரம் நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது.

2016-17-ஆம் நிதியாண்டில் 359 பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 22 இலட்சத்து 50 ஆயிரம் நிதிஉதவியும், 2017 - 18-ஆம் நிதியாண்டில் 2247 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 81 இலட்சத்து 25 ஆயிரம் நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது" என்று அதில் கூறியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் அதிரடி நீக்கம்.. அசராமல் சாட்டையை சுழற்றும் இபிஎஸ்!
Tamil News Live today 27 December 2025: ஜனனியை பிசினஸ் தொடங்க விடாமல் தடுக்கும் விசாலாட்சி... அனல்பறக்கும் திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது