
எஸ்பிஐ அதிரடி அதிர்ச்சி.....!!
மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எஸ் பி ஐ வங்கி , வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் 5௦௦௦ ரூபாயை குறைந்தபட்ச இருப்பு தொகையாக வைத்திருக்க வேண்டும் என்றும் , அவ்வாறு வைத்திருக்க தவறினால், கூடுதலாக அபராதம் வசூலிக்கப்படும் என அதிரடியாக எஸ் பி ஐ தெரிவித்துள்ளது
இருப்பு தொகையாக ரூ.5000
பெருநகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்ச தொகையாக ரூ.5000 மும், நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.3000மும், புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.2000 மும், கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000 மும் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்ச வைப்பு தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாக எஸ் பி ஐ தெரிவித்துள்ளது. இந்த செய்தி மக்களிடையே அதிர்ச்சியை எற்படுதியுள்ளது
அமல் ?
குறைந்தபட்ச இருப்புத்தொகையை , வங்கி சேமிப்பு கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.
அபராதம் விதிப்பது எப்படி ?
குறைந்த பட்ச இருப்பு தொகையை விட எவ்வளவு தொகை குறைவாக உள்ளதோ, அதன் அடிப்படையில் வசூலிக்கப்படும் என்றும் , உதாரணமாக, 50 முதல் 75 சதவீதம் வரை குறைவாக இருந்தால் அவர்களிடம் ரூ.75 அதனுடன் சேவை வரியும் சேர்த்து அபராதம் விதிக்கப்படும் என்றும். 50 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் ரூ.50 உடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என்றும் குறிபிடப்பட்டுள்ளது