
பெரம்பலூரில் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும்போதே சுமை ஆட்டோ தீப்பிடித்ததில் ஆட்டோவும், அதிலிருந்த பொருட்களும் கருகி நாசமாயின.
சென்னையிலிருந்து திருச்சி நோக்கி மேஜைகளை ஏற்றிக் கொண்டு சுமை ஆட்டோ ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அந்த ஆட்டோவை, சென்னையைச் சேர்ந்த பீட்டர் (40) ஓட்டிவந்தார்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே நேற்று மாலை வந்தது. அப்போது, சுமை ஆட்டோவிலிருந்து புகை வந்தால், ஆட்டோவை நிறுத்திவிட்டு ஓட்டுநர் இறங்கிவிட்டார்.
ஓட்டுநர் இறங்கி என்னவென்று பார்ப்பதர்குள், சுமை ஆட்டோவில் திடீரென தீப்பிடித்து எரிந்து பரவியது.
இதில், ஆட்டோ மற்றும் அதிலிருந்த மேஜைகள் அனைத்தும் எரிந்து கருகின.
பின்னர், பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பால்ராஜ் உள்ளிட்ட தீயணைப்பு படை வீரர்கள் அங்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து 10 நிமிடங்களில் தீயை அணித்துவிட்டனர்.
வாகனத்தில் தீ எப்படி பிடித்தது என்று மர்மமாகவே இருந்தது. பின்னர், இதுகுறித்து பெரம்பலூர் காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.