
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காட்டுத் தனமாக பெய்த மழையால் மக்களும், விவசாய்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தின் பல இடங்களில் பரலாக மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து இருந்தது.
இந்த செய்தி கடும் வறட்சியாலும் குடிநீர் பஞ்சத்தாலும் தவிக்கும் மக்களுக்கு தேனை ஊற்றியது போல இருந்தது.
தமிழகத்தின் பல்வேறு இடங்கள் என்று சொன்னதால் தங்கள் ஊருக்கு மழை வருமா? என்று வானத்தை பார்த்துக் கொண்டு இருந்த பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு வருணன் மழை தாராளமாகவே கொடுத்துள்ளார் என்று கூறலாம். அந்த அளவிற்கு பரவலாக மழை பெய்தது.
பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பெரம்பலூர், வேப்பந்தட்டை, எசனை, பாடாலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை காட்டுத் தனமாக பெய்தது. அதனை தொடர்ந்து, குளிர்காற்றும் வீசியது.
இதனால், பெரம்பலூர் மாவட்ட மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியில் தத்தளித்தனர்.