
பள்ளித் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் 8-ஆம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்.
உதகை எல்க்ஹில் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் எனபவரின் மகள் சினேகா. இவர், எட்டின்ஸ் சாலையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், சினேகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு வியாழக்கிழமை இரவு முயன்றுள்ளார்.
மகளின் அலறல் சத்தம் கேட்டு அறைக்குள் ஓடிவந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு உதகை அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், சினேகா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, உதகை நகர காவல் நிலையத்தில், “பள்ளியில் நடந்த தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மன உளைச்சலடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்” என்று வழக்குப் பதியப்பட்டுள்ளது.