
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இரவு நேரத்தில் வைபவ் என்பவர் தன் மனைவியுடன் மது அருந்த வந்துள்ளார்.
அப்போது, மது போதையின் உச்சத்தில் இருந்த சுரேஷ், அன்பு, சந்தீப் ஆகியோர் வைபவின் மனைவியை லேசாக உரசியுள்ளனர்.
இதை கண்ட தொழில் அதிபர் வைபவ் அதனை தட்டி கேட்டுள்ளார்.
அப்போது ஏற்பட்ட மோதலில் மூன்று பேரும் சேர்ந்து வைபவின் மூக்கை உடைத்துள்ளனர்.
நட்சத்திர ஹோட்டலில் பணியில் இருந்த பவுண்சர்ஸ் அவர்கள் மூன்று பேரையும் தூக்கி வெளியில் வீசியுள்ளனர்.
தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த நுங்கம்பாக்கம் போலீசார், சுரேஷ், அன்பு, சந்தீப்பை காவல் நிலையம் அழைத்து சென்று அவர்கள் மீது பிரிவு 75 ந்ன் கீழ் சாதாரண வழக்கு ப்திவு செய்து அனுப்பியுள்ளனர்.