
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின் போது, 13 அப்பாவி மக்களை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம், தமிழர்கள் மத்தியில் பெரிய அளவிலான பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடப்போவதாக, தூத்துக்குடி ஆட்சியர் தற்போது அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஸ்டெர்லைட்டுக்கான மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பை துண்டித்திருப்பதாகவும், அதில் அவர் தெரிவித்திருக்கிறார்.
இத்தனை மாற்றங்கள் நடப்பதற்கு 13 அப்பாவிகளின் உயிர், பலியாக தேவைப்பட்டிருக்கிறதா இந்த அரசாங்கத்திற்கு? என மக்கள் மனது இன்னும் ஆதங்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.
இந்த கொடூர சம்பவத்தில் ஏற்பட்ட உயிர் பலியை கண்டித்து தனது கண்டனத்தை தெரிவித்திருக்கும் இயக்குனர் பாண்டியராஜ் “ பள்ளி மாணவன் எப்படி விடுமுறைக்கு நாட்களை காலண்டரில் பார்த்துக்கொண்டிருப்பானோ, அதேபோல தான் உங்கள் ஆட்சி முடிவை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.உங்களை எதிர்த்து கேள்வி கேட்டால் சுடுவீர்களா? அப்படிப் பார்த்தால் உங்களை எப்போதும் எதிர்த்து கேள்வி கேட்கும், சீமான் அண்ணன் மற்றும் ஸ்டாலின் சார் இவர்களை தான் நீங்கள் சுட வேண்டும். அவர்களையும் சுட நீங்கள் தயங்க மாட்டீர்கள்” என ஆவேசமாக கூறியிருக்கிறார்.