
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு நடந்த திக்… திக்..நிமிடங்கள்….
மாலை 4.30 மணி : அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டாவது வளாகம் பரபரப்படைந்தது
மாலை 5 மணி: முதல்வர் ஜெயலலிதாவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் பரவியது
மாலை 5.30 மணி : சென்னையில் இருந்த மூத்த அமைச்சர்கள், உயரதிகாரிகள் அப்பல்லோவிற்கு விரைந்தனர்.
மாலை 6 மணி : அப்பல்லோ மருத்துவமனை முன்பு அசாதாரணமான சூழ்நிலை நிலவியது. ராகுகால பூஜை துர்க்கைக்கு செய்ய சொல்லி அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இரவு 7 மணி: தமிழக காவல்நிலையங்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறு அப்பல்லோவில் இருந்து உத்தரவு பறந்தது
இரவு 8 மணி : அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ நோக்கி வரத் தொடங்கினர்
இரவு 9.15 மணி: அப்பல்லோ அறிக்கை வெளியானது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும, தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக அறிக்கை.
இரவு 9.30 மணி : மும்பையில் இருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னைக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது
இரவு 9.45 மணி அப்பல்லோவில் நடப்பது பற்றி உள்துறை அமைச்சா ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்
இரவு 10 மணி : அப்பல்லோவில் அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள் அவசர கூட்டம் நடத்தினர்.
இரவு 10.15 மணி : அதிமுக தொண்டர்கள் கூட்டம் அதிகரிக்கவே, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பிரதமர் மோடி சென்னையில் நடக்கும் நிலவரம் குறித்து கேட்டறிந்ததாக தகவல் வெளியானது.
இரவு 11.00 மணி : போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன்தலைமையில் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை.
இரவு 11.30 மணி: ஆளுநர் வித்தியாசாகர் ராவ் சென்னை விமானநிலையம் வந்து இறங்கினார்.
இரவு 12.05 மணி: அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆளுநர் வித்தியாசாகர் ராவ், வருகை. மருத்தவமனையில் 10 நிமிடங்கள் இருந்து, மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
இரவு 12.15 மணி: ஆளுநர் வித்தியாசாகர் ராவ், ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்.
இரவு 12.30 மணி: மாநிலத்தில் உள்ள அனைத்து போலீசாரும் சீருடையுடன் ஆணையர்கள், கண்காணிப்பாளர்கள் முன் இன்று காலை 7 மணிக்கு ஆஜராக உத்தரவு
இரவு 1.00 மணி: அப்பல்லோ மருத்துவமனையின் 4 வாயில்களிலும் போலீசார் குவிப்பு