முந்தைய ஆண்டுகளில் அணையில் தற்போதைய அளவைவிட அதிக நீர் இருந்துள்ளது. ஆகஸ்ட் 10, 2020 இல் 86 அடி நீர் இருந்துள்ளது. 2021ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 74 அடி நீர் இருந்தது.
காவிரி டெல்டா பகுதியின் உயிர்நாடியான மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் நீர்வரத்து குறைந்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால், காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு ஒரு கன அடி வீதம் குறைந்து வருகிறது. அணையின் முழு கொள்ளளவு 120 அடியாக உள்ள நிலையில், தற்போது அணையில் 55.16 அடியாக நீர் மட்டுமே உள்ளது. நீர்வளத் துறையின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி முழுமையாக நிரம்பியிருந்தது.
முந்தைய ஆண்டுகளிலும், அணையில் தற்போதைய அளவைவிட அதிக நீர் இருந்துள்ளது. ஆகஸ்ட் 10, 2020 இல் 86 அடி நீர் இருந்துள்ளது. 2021ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 74 அடி நீர் இருந்தது.
உடம்பை பாடாய் படுத்தும் அக்னி தோஷம்: வீட்டிலேயே எளிமையாகச் செய்யக்கூடிய பரிகாரம் இதுதான்!
கர்நாடகா முதல்வர் சித்தராமையா தமிழகத்திற்கு கூடுதலாக காவிரி நீரை திறந்துவிட முடியாது எனக் கூறியதால், மேட்டூரில் நீர் இருப்பு குறைந்து வருவது குறித்து விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே போதிய அளவு பாசன நீர் இல்லாமல் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெற்பயிர்கள் கருகத் தொடங்கிவிட்டன.
இனி கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டாலும் பயிர்களை காப்பாற்ற முடியாத அளவுக்கு காலதாமதம் ஆகிவிட்டது என்று பல விவசாயிகள் சொல்கிறார்கள். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், "இந்த நெருக்கடியான சூழ்நிலையில் குறுவை பயிர்களை அறுவடை வரை பேணி வளர்ப்பதில் விவசாயிகள் நம்பிக்கை இழந்துவிட்டனர். இனி, சம்பா பருவத்திலாவது நெல் சாகுபடி செய்ய முடியுமா என்ற கவலையில் உள்ளனர்.
அணைக்கு நீர்வரத்து 3,056 கனஅடியாக குறைந்ததால், நீர் திறப்பு 6,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது." என்றார்.
"டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்துக்காக வெளியேற்றும் நீரின் அளவை சனிக்கிழமை முதல் 9,000 கனஅடியில் இருந்து 6,000 கனஅடியாகக் குறைத்துள்ளோம்" என நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். கடந்த 2017ஆம் ஆண்டு மேட்டூர் அணையில் நீர்மட்டம் 25 அடிக்குக் கீழே சரிந்தபோது, மேட்டூர் அணையில் நீர்மட்டம் பற்றாக்குறை அளவுக்கு வெறும் 3 அடி மட்டுமே குறைவாக இருந்தது. இந்த ஆண்டு நிலைமை அந்த அளவிற்கு மோசமடையாது என்று நம்புகிறோம்" என்றும் அந்த அதிகாரி நம்பிக்கை தெரிவிக்கிறார்.
இந்த சூழலில் கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 6,998 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல கபினி அணையில் இருந்தும் வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் திறக்கப்படும்நீர் வினாடிக்கு 5,268 கனஅடியில் இருந்து சுமார் 7000 கனஅடி வரை கூடியுள்ளது. கர்நாடகாவின் இந்த இரு அணைகளில் இருந்தும் மொத்தமாக வினாடிக்கு 11,998 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
'கையை வெட்டுவோம்': எச்சரிக்கையை மீறி, ஹரியானா மகாபஞ்சாயத்தில் வெறுப்பு பேச்சு